For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருங்கும் மழைக்காலம்... உயிருக்கு உலை வைக்கும் ஏடீஸ் கொசுக்கள்!!

மனித உயிருக்கு உலை வைக்கும் ஏடீஸ் கொசுக்கள்தான் டெங்கு காய்ச்சலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: மனித உயிருக்கு உலை வைக்கும் ஏடீஸ் கொசுக்கள்தான் டெங்கு காய்ச்சலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

மழைக்காலம் நெருங்கும் நிலையில் டெங்கு, மலேரியா, சிக்கன்குன்யா போன்ற காய்ச்சல்களின் தாக்கமும் இனி அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் கோரதாண்டவத்துக்கு தமிழகத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

டெங்கு பீதி

டெங்கு பீதி

இதனால் டெங்கு என்றாலே மக்கள் பெரும் பீதியடைந்தனர். இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்கும் முறைகளை மக்கள் முன்கூட்டியே கையாள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்த தொடங்கிவிட்டார்கள்.

நண்ணீரில் உருவாகும்

நண்ணீரில் உருவாகும்

டெங்கு காய்ச்சல் ஏடீஸ் கொசுக்களால் உருவாகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் நண்ணீரில் உருவாகிறது.

உயிர் இழப்பு வரை

உயிர் இழப்பு வரை

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் தட்டை அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து, உயிர் இழப்பு வரை கொண்டு செல்லும்.

உயிருக்கு உலை வைக்கும்

உயிருக்கு உலை வைக்கும்

மனித உயிருக்கு உலை வைக்கும் இந்த ஏடீஸ் கொசுக்களை ஒழித்தாலோ அல்லது கட்டுப்படுத்தினாலோ டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். அதற்கு நண்ணீர் குறிப்பாக மழை நீர் எங்கும் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொசு உற்பத்தி

கொசு உற்பத்தி

தேங்காய் மட்டை, பயன்படாத பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் கவர்கள், டயர்கள், வாட்டர் டேங்குகள் போன்றவற்றில் தேங்கும் மழை நீரால் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடீஸ் கொசு உற்பத்தியாகிறது.

உற்பத்தியை தடுக்கலாம்

உற்பத்தியை தடுக்கலாம்

இவற்றை தூய்மையாக வைத்துக்கொண்டு மழை நீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொண்டாலே ஏடீஸ் கொசு உற்பத்தியை தடுத்து டெங்கு காய்ச்சலை தடுக்கலாம்.

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம்

இதேபோல் பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கூடிய அரிய தாவரங்கள் உள்ளன. மூலிகை தாவரமான நிலவேம்பு (சிறியாநங்கை) குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகியவை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
To keep our place clean can stop Aedes mosquitoes production which is causing Dengue fever.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X