For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சோதனை ராக்கெட்.. டிசம்பரில் ஏவும் இஸ்ரோ!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் முதன்முறையாக மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் சோதனை அடிப்படையிலான ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அதிகாரி பிரசாத் தெரிவித்துள்ளார்.

விண்ணுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி.- மார்க் 3 என்ற அந்த ராக்கெட் அடுத்த மாதம் 2வது வாரத்தில் சோதனை அடிப்படையில் விண்ணில் ஏவப்படுகிறது.

To put man in space, Isro to test crew module in December

விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் என்றாலும் இதை சோதனை முறையில் இஸ்ரோ செய்ய உள்ளது. ஜி.எஸ்.எல்.வி.-மார்க் 3 இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 4 டன் அளவுக்கு பொருட்களை ஏற்றி அனுப்ப முடியும். இதற்கான கிரையோஜெனிக் என்ஜினை நெல்லையில் உள்ள இஸ்ரோவின் மகேந்திரகிரி அமைப்பில் சோதனை செய்து வருகிறார்கள்.

இது குறித்து இஸ்ரோ அதிகாரி பிரசாத் கூறுகையில்,

மனிதனை விண்ணுக்கு அனுப்ப வசதியாக சோதனை அடிப்படையில் ஜி.எஸ்.எல்.வி.-மார்க் 3 ராக்கெட்டை டிசம்பர் 15ம் தேதியில் இருந்து 20ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த உள்ளோம். தேதி இன்னும் முடிவாகவில்லை.

இது மாதிரி ராக்கெட் தான். இதில் 3 மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் அழைத்து வர முடியும். ராக்கெட்டில் கப் கேக் போன்ற அறை உள்ளது. அந்த அறை 3 டன் எடையும் 2.7 மீட்டர் உயரமும், 3.1 மீ்ட்டர் சுற்று வட்டமும் கொண்டது. ராக்கெட்டை விண்ணில் ஏவியபிறகு 126 கிமீ உயரத்தில் அந்த அறை தனியாக பிரிந்துவிடும்.

வீரர்கள் யாரும் இல்லாத அந்த அறை பின்னர் பூமிக்கு திரும்பும். அது 3 பாராசூட்கள் மூலம் பத்திரமாக தரையிறங்கும். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மனிதனை விண்ணுக்கு அனுப்பியுள்ளன. இந்த சோதனை வெற்றி பெற்றால் மனிதனை விண்ணுக்கு அனுப்பிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெறுவோம் என்றார்.

English summary
In an effort to send man to space, ISRO is carrying out an experimental flight of a GSLV- MarkIII in the second week of December.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X