For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா உருவம் பொறித்த கை கடிகாரங்களும், கிரிஸ்டல் பொம்மையும் யாருடையது?

கொடநாடு கொலை வழக்கில் பிடிபட்ட சயானின் காரில் இருந்து ஜெயலலிதா உருவம் பொறித்த கடிகாரங்களும், கிரிஸ்டல் பொம்மையும் யாருடையவை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சயானுடைய காரில் இருந்து 5 கைக்கெடிகாரங்கள், ஒரு கிரிஸ்டல் பொம்மை கண்டு பிடிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியானது.

ஆனால் அந்த பொருட்கள் கொடநாட்டில் திருடப்பட்டதுதானா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. இந்த புகைப்படங்கள் நாங்கள் வெளியிடவில்லை என்று தற்போது போலீசார் மறுத்துள்ளனர்.

கொடநாடு கொலை வழக்கு, ஆரம்பம் முதலே குழப்பமும், மர்மங்களும் நிறைந்ததாகவே போய் கொண்டிருக்கிறது. காவலாளி ஓம் பகதூர் கொலை, டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி மரணம், அவரது நண்பர் சயான் விபத்தில் சிக்கியது என திகில் நிறைந்த திரைப்படம் போல உள்ளது.

கடிகாரங்கள் மீட்பா?

கடிகாரங்கள் மீட்பா?

இந்த நிலையில்தான் சயானுடைய காரில் இருந்து 5 கைக்கெடிகாரங்கள், ஒரு கிரிஸ்டல் பொம்மை கண்டு பிடிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியானது. இந்த கடிகாரங்கள் பற்றி தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா உருவம்

ஜெயலலிதா உருவம்

கொடநாடு ஜெயலலிதா பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக கூறப்படும் கைக்கடிகாரங்களில் ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான கடிகாரத்தை, அவர் ஒருபோதும் அணிந்தது கிடையாது.

அது லோக்கல் கடிகாரம்

அது லோக்கல் கடிகாரம்

ஜெயலலிதாவின் கை கடிகாரங்கள் அதிக விலை கொண்டவை, சர்வதேச தரம் வாய்ந்தவை. பல லட்சம் மதிப்பு கொண்டவை. சமூக வலைத்தளங்களில் வெளியான படத்திலுள்ள கைக்கடிகாரங்கள் உள்ளூர் தயாரிப்பாகும்.

போலீஸ் மறுப்பு

போலீஸ் மறுப்பு

ஊடகங்களில் வெளியான கைக்கடிகாரங்களுடன் கூடிய போட்டோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, அந்த போட்டோ எங்களால் வெளியிடப்பட்டதல்ல என்று கூறியுள்ளார். அப்போ அந்த கடிகாரங்கள், பொம்மை யாருடையவை? எதற்காக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அந்த போட்டோவை திட்டமிட்டு வெளியிட வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

English summary
Police have seized some stolen watches from the Kodanad estate. The question now is to whom they belong?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X