For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் இருந்து வந்த ரூ10 லட்சம் புகையிலை பண்டல்கள் அதிரடி பறிமுதல்

Google Oneindia Tamil News

நெல்லை: டெல்லியிருந்து கொண்டு வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான புகையிலையை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்தது. ரயிலில் இருந்து பார்சலில் வந்த 90 மூட்டைகளை ரயில்வே தொழிலாளர்கள் கீழே இறக்கினர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சந்திப்பு ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சிறப்பு எஸ்ஐ முத்தமிழ், ஏட்டு தவசு, மாரியப்பன் ஆகியோர் சந்தேகம் அடைந்து மூட்டைகளை சோதனையிடடனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும். போலீசார் அதை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அந்த புகையிலை பண்டல்கள் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது, டெல்லியிலிருந்து அவற்றை அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Nellai police confiscated 10 lakhs worth tobacco bundles in Nellai railway station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X