For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று "இடதுசாரிகள்" தினம்...!

Google Oneindia Tamil News

சென்னை: வலது.. இடது.. இது உலக அளவில் பிரபலமான இரு வார்த்தைகள்.. நாம் "அதை" மட்டும் சொல்லவில்லை... அரசியலும் பேசவில்லை. இது இடது கை பழக்கம் உடையவர்களுக்கான சமாச்சாரம்.

இன்று உலக இடது கை பழக்கம் உடையவர்களுக்கான தினம். மேற்கத்திய நாடுகளில் இடது கைப் பழக்கம் கொண்டோர்தான் பெரும்பான்மையினர். இதனால்தான் அவர்களுக்கு வசதியாக போக்குவரத்து வதியே தலைகீழாக இருக்கும். நம்ம ஊரில் இடது பக்கமாக வாகனங்கள் போகும்... ஆனால் அங்கோ வலது பக்கம்தான் வாகனப் புழக்கம்.

இடது கை பழக்கம் கொண்டோர் இந்தியாவில் சற்று வித்தியாசமாக பார்க்கப்படும் நிலை இன்றைய "செவ்வாய் கிரக" காலத்திலும் தொடர்கிறது என்பது உண்மைதான்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில இடது கை பழக்கம் கொண்ட பிரபலங்களைப் பார்ப்போமா...

எல்லாமே கஷ்டம்தான்

எல்லாமே கஷ்டம்தான்

மேலை நாடுகளில் இடது கை பழக்கம் கொண்டோருக்கு வசதியாக பல விஷயங்களில் காம்பரமைஸ் செய்வார்கள். வசதிகள் செய்து தருவார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. எல்லாமே இங்கு வலது கை பழக்கம் கொண்டவர்களுக்கு சாதகமாகவே உள்ளது.

சாதனையாளர்கள்

சாதனையாளர்கள்

உண்மையில் இடது கை பழக்கம் கொண்டோர்தான் திறமையாளர்களாக இருக்கிறார்களாம். அதை விட சாதனையாளர்களாக திகழ்வோரையும் எடுத்துக் கொண்டால் லெப்ட் ஹேண்டர்ஸ்தான் அதிகம் இருக்கிறார்கள்.

ஜூவாலா கட்டா

ஜூவாலா கட்டா

பேட்மிண்டன் ஆட்டத்தில் அசத்தி வரும் ஜுவாலா கட்டா ஒரு இடது கை பழக்கம் கொண்டவர்தான். மன உறுதிக்கு இவரை உதாரணமாக காட்டலாம். சரியான ஃபைட்டரும் கூட.

சானியா மிர்ஸா

சானியா மிர்ஸா

டென்னிஸ் புயல் சானமியா மிர்ஸா, ஒரு லெப்ட் ஹேண்டர்தான். இவரைப் பற்றி சொல்ல வேண்டியதி்ல்லை. தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக என்று பாட்டே பாடலாம் இவரைப் பற்றி.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

இவர் கடவுள்.. அதாவது கிரிக்கெட் கடவுள். சச்சின் தொட்டதெல்லாம் பொன்னானது தனி வரலாறு. இடது கை பேட்ஸ்மேன்களுக்கு தனி இலக்கணம் வகுத்தவர் சச்சின்.

சாய்னா

சாய்னா

பேட்மிண்டனில் பெரும் சாதனைகள் படைத்த சாம்பியன் சாய்னா ஹெஹ்வால். இவரும் லெப்ட் ஹேண்டர்தான்.

ஏஞ்சலெீனா ஜூலி

ஏஞ்சலெீனா ஜூலி

ஹாலிவுட் ஸ்டார் ஏஞ்செலீனா ஜூலியும் ஒரு இடது கையாளர்தான். இவரது சாதனைகளும், பெருமையும், திறமையும் உலகறிந்த ஒன்று.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடியும் ஒரு இடது கை பழக்கம் கொண்டவர்தான். சாதாரண நிலையிலிருந்து உயரிய நிலைக்கு உயர்ந்தவர். இவரும் ஒரு சிறந்த ஃபைட்டர்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

இடது கை பேட்ஸ்மேன்கள் வரிசையில் இன்னொரு பிரபலம் யுவராஜ் சிங். இவரது ஸ்டைலிஷான ஆட்டத்திற்கு மயங்காத ரசிகர்கள் கிடையாது.

பின்லேடன்

பின்லேடன்

உலகையே ஆட்டிப்படைத்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடனும் கூட ஒரு லெப்ட்ஹேண்டர்தான். இவரது திறமையும், அசாத்திய வலிமையும் உலகையே அரள வைத்தது ஒரு காலத்தில்.

கபில்தேவ்

கபில்தேவ்

இந்தியாவின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான, இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் கேப்டனான கபில்தேவும் ஒரு இடது கை பழக்கம் கொண்டவர்தான். இவரைப் பற்றி பல பக்கம் பேசலாம், எழுதலாம்.

பேகம் பரா

பேகம் பரா

இவரைப் பற்றி இப்போது உள்ளவர்களுக்குத் தெரியாது. அந்தக் காலத்து தாத்தா பாட்டிகளுக்கு நன்றாகத் தெரியும். இவர் பாலிவுட்டின் அதி பயங்கர கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். பின்னாளில் பாகிஸ்தானில் போய் செட்டிலானவர். படு துணிச்சலான கவர்ச்சி நடிகையான இவரும் லெப்ட் ஹேண்டர்தான்.

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

அதேபோல டோணி இருக்கிறார். கங்குலி இருக்கிறார். இவர்களும் லெப்ட் ஹேண்டர்கள்தான். நம்ம ஊர் யுவன் ஷங்கர் ராஜாவும் கூட இடது கை பழக்கம் கொண்டவர்தான்.

உண்மையான சாதனையாளர்கள்

உண்மையான சாதனையாளர்கள்

வலது கை பழக்கம் கொண்டவர்களைத்தான் நமது சமூகம் நார்மலாக பார்க்கிறது.. ஆனால் இடது கையாளர்களிடம் ஓர வஞ்சனைதான் காட்டுகிறது என்ற ஏக்கமும், வருத்தமும், அவர்களிடம் உண்டு. ஆனால் உண்மையான சாதனையாளர்கள் அவர்கள்தான் என்பதே நிதர்சனம்.. பாராட்டுவோம், கொண்டாடுவோம் இடது கையாளர்களையும்.

English summary
Today is World Left handers day and the day is celebrated in western countries in a big way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X