For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதிய உணவு திட்டத்தை முதல் முறையாக உலகுக்கே கொண்டு வந்தவர் காமராஜர்!

மதிய உணவு திட்டத்தை முதல் முறையாக உலகத்துக்கே கொண்டு வந்தவர் காமராஜர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மதிய உணவு திட்டத்தை முதல் முறையாக உலகத்துக்கே கொண்டு வந்த காமராஜரின் 116 ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

கல்வி கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இவர் 1903-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ம் தேதி, விருதுநகர் என்றுஅழைக்கப்படும் அப்போதைய விருதுபட்டியில் குமாரசாமி நாடார்- சிவகாமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார்.

Today is Kamarajars birthday

16 வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து அரசியல் பிரவேசம் கண்டார். தமிழகத்தில் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்த போதும் எளிமையான தலைவராக வாழ்ந்தார்.

பெருந்தலைவர் காமராஜர், கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டவர். பண்டித நேருவின் மறைவிற்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்கு பிறகு இந்திராகாந்தியையும் பிரதமராக்கினார்.

இலவச கல்வியையும், மதிய உணவு திட்டத்தையும் 1957-ம் ஆண்டிலேயே முதன் முறையாக உலகுக்கு கொண்டு வந்தது காமராஜரே! அரசியல் தலைவர்களால் குரு என்று போற்றப்படுபவர் காமராஜர்.

இத்தனை சாதனை செய்த இவரது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாளை முன்னஇட்டு இன்று தமிழகத்தில் அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

English summary
Kamarajar's birthday is celebrated today in Tamilnadu. His birthday is celebrated as Education development day also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X