For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரு ஆண்டுகளுக்கு பிறகு.. அதிக ஈரப்பதமான நாள் இன்று.. ஏன் எப்படி?

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Heavy rain lashes in Chennai, Kanchipuram

    சென்னை: கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பருக்கு பிறகு இன்றுதான் அதிக ஈரப்பரமான நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெப்பம் நீடித்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    காலாண்டு தேர்வு.. சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அடை மழை பெய்தாலும் பள்ளிகள் விடாது இயங்கும்காலாண்டு தேர்வு.. சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அடை மழை பெய்தாலும் பள்ளிகள் விடாது இயங்கும்

    மழை

    மழை

    இந்த மழை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்தது.

    வெளுத்து வாங்கும்

    வெளுத்து வாங்கும்

    குறைந்த நேரத்தில் அதிகப்படியான மழை கொட்டி தீர்த்ததால் இன்றைய தினம் அதிக ஈரப்பதமான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் நடந்து வருகிறது. இந்த காலத்தில் கேரள, கர்நாடகம், வடமாநிலங்களில் மட்டுமே மழை வெளுத்து வாங்கும்.

    குறைந்த நேரத்தில்

    குறைந்த நேரத்தில்

    ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குறைந்த நேரத்தில் அதிகப்படியான மழை பெய்தது. இது வழக்கத்துக்கு மாறானதாகும். இது போன்ற ஒரு நிலை கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்டது. குறைந்த நேரத்தில் அதிக மழை என்பதெல்லாம் தமிழகத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே நடக்கும்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    எனினும் தற்போது பருவமழையே இல்லாத நிலையில் இது போன்ற அதிக மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் ஏரிகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவசாயிகள்

    விவசாயிகள்

    இந்த மழை இரவு நேரத்தில் மட்டுமே பெய்யும். காலை வேளையில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கப்படவுள்ளது. இந்த ஆண்டாவது மழை பெய்யுமா என விவசாயிகள், மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    English summary
    Today is the highest moisture day in Tamilnadu, says Chennai Meteorological Centre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X