For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்றே கடைசி.. மாலை 5 மணிக்குள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பிங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மருத்துவ படிப்பு-விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று கடைசி-வீடியோ

    சென்னை: மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று கடைசி நாளாகும். விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகங்கள் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. 22 அரசு மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இந்த விண்ணப்படக்டள விநியோகம் செய்யப்பட்டன. நேற்று மாலையுடன் இந்த விண்ணப்ப விநியோகமும் நிறைவடைந்தது.

    Today is the Last Date for submitts the MBBS, BDS application forms

    அரசு இடங்களுக்கு, 24 ஆயிரத்து, 933 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13 ஆயிரத்து, 338 விண்ணப்பங்களும் விநியோகமாயின. இவ்வாறாக மொத்தம் மொத்தம், 38 ஆயிரத்து, 271 விண்ணப்பங்கள் விநியோகமாயின.

    இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செய்ய, இன்று கடைசி நாளாகும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, நேரிலோ தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கோ மாணவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, திட்டமிட்டப்படி, ஜூன், 28ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஜூலை, 1 முதல், 5 வரை, முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெறும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    English summary
    Today is the Last Date for submitts the MBBS, BDS application forms
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X