For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்... பகவான் போன்ற ஆசிரியரை போற்றும் தினம்!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: திருவள்ளூர் ஆசிரியர் பகவான் போல் ஆசிரியர்கள் இருந்துவிட்டால் தமிழகம் முழுவதும் இருந்துவிட்டால் அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகள் போல் தரம் உயர்ந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்றே முன்னோர்கள் உறவுகளை வரிசைப்படுத்தியுள்ளனர். இதில் மாதா, பிதாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பது குருவாகும். அதாவது பாடம் கற்பிக்கும் ஆசிரியராவார்.

இந்த பிரபஞ்சத்தை படைத்த கடவுளே ஆசிரியருக்கு அடுத்த இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடவுளை காட்டிலும் ஒரு படி மேலே போய் ஆசிரியரை கொண்டாட வேண்டும்.

போற்ற வேண்டும்

போற்ற வேண்டும்

அந்த வகையில் இன்று ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. துணை குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் ஆசிரியர் பகவான் போன்றோரை போற்றுவதை நாம் தவற கூடாது.

அரசு உத்தரவு

அரசு உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோமேஸ்வரன் மலையடிவாரத்தில் உள்ளது வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளி. இங்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்றுபவர் பகவான். இவரை வேறு ஒரு பள்ளிக்கு இடமாற்ற அரசு உத்தரவு பிறப்பித்தது.

நெகிழ செய்தது

நெகிழ செய்தது

இதை கேட்ட மாணவர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். இதையடுத்து இடமாற்ற உத்தரவை வாங்க பள்ளிக்கு சென்ற பகவானை சுற்றி நின்று கொண்டு மாணவர்கள் பாச போராட்டம் நடத்தினர். அவரை பிடித்து கொண்டு மாணவர்கள் அழுத காட்சி இப்படியும் ஒரு ஆசிரியரா என்ற நெகிழ வைத்தது.

முடிவை மாற்றி கொண்டது

முடிவை மாற்றி கொண்டது

இடமாற்றம் என்பது அனைவருக்கும் வரத்தான் செய்யும். அதற்கு பகவான் விதிவிலக்கல்ல என்று அரசு விளக்கம் அளித்தும் மாணவர்கள் சமாதானம் அடையாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசு தனது முடிவை மாற்றி கொண்டது. இதனால் மாணவர்கள் குதூகலமாகினர்.

தமிழ் பேச வராட்டி

தமிழ் பேச வராட்டி

ஆசிரியர் பகவான் ஆங்கில பாடத்தை நன்றாக நடத்துவாராம். சாரி, தேங்க்ஸ் உள்ளிட்ட வார்த்தைகளை எதற்காக உபயோகம் செய்ய வேண்டும். எதற்காக செய்ய கூடாது என்பனவற்றை எடுத்துரைப்பாராம். மேலும் ஆங்கிலம் என்பது அறிவு இல்லை. மற்ற மொழிகளை போல் அதுவும் ஒரு மொழி என்பாராம். ஆங்கிலம் பேச தெரியாவிட்டால் வெட்கப்பட கூடாது, ஆனால் தமிழ் பேச வராட்டி வெட்கப்பட வேண்டும் என்பாராம்.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

மாணவிகள் என்றாலே காம வெறியுடன் பார்க்கும் சில ஆசிரியர்களுக்கு மத்தியில் பகவான் போன்ற ஆசிரியர்களை இந்த ஆசிரியர்கள் தினத்தன்று நாம் பாராட்டாமலும் நினைவுக்கூராமலும் இருக்க முடியாது. ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்.

English summary
Today Teacher's day is being celebrated. In this day recalling the teacher Bhagavan who works in a Veliyagaram village government school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X