For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழப்பமான அரசியல் சூழலில் நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம் - முதல்வர் அழைப்பு - வீடியோ

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் நிலவும் குழப்பமான சூழ்நிலையில் நாளை எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகத்துக்கு வர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததற்கு பிறகு தினகரன் தரப்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். கட்சி பதவியில் இருந்து எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைவரையும் நீக்கி வருகின்றனர்.

Tomorrow all Admk MLAs meeting in Admk head quarter

இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்தும், ஆளுநர் உள்கட்சி விவகாரத்தில் நான் சட்டப்படி தலையிட முடியாது என கூறிவிட்டார்.

இந்த பரபரப்பான சூழலில் நாளை அனைத்து எம்.எல்.ஏக்களும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாளை வரும் எம்.எல்.ஏக்களிடமும் அமைச்சர்களிடமும் தனக்கு ஆதரவளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவாதிப்பார் என தகவலகள் வெளியாகியுள்ளன.

English summary
Tamilnadu CM Edappadi Palanisamy asked every Admk MLA to come Admk head quarter tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X