For Daily Alerts
Just In
சேவை வரி ஏய்ப்பு - சென்னையைச் சேர்ந்த பிரபல ஐ.டி கம்பெனி உரிமையாளர் கைது
சென்னை: வாடிக்கையாளரிடம் சேவை வரி வசூலித்துவிட்டு அதை அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தனியார் நிறுவனத்திடம் இருந்து, 2010 - 2011 முதல் சேவை வரி செலுத்துவதற்காக பெற்ற 2.94 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.

மேலும் அவர் செலுத்த வேண்டிய சேவை வரியையும் செலுத்தவில்லை. அவரது அலுவலகத்தில் நடந்த சோதனையில் இது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் என மத்திய கலால் நுண்ணறிவு அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் குறித்தோ, அவரது அலுவலகம் குறித்தோ தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.