For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ மை காட்.. எத்தனை கோடி.. பில் கேட்ஸ் முதல் செங்கிஸ்கான் வரை.. உலகை ஆளும் பணக்காரர்கள்!

மன்ஸா முஸா, பில் கேட்ஸ், செங்கிஸ்கான் என்று உலகில் 10 பேர் இப்போது வரை பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: மன்ஸா முஸா, பில் கேட்ஸ், செங்கிஸ்கான் என்று உலகில் 10 பேர் இப்போது வரை பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

உலகம் முழுக்க உள்ள வளத்தை இரண்டு சதவிகித பணக்காரர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு காலத்திலும் பணக்காரர் என்பதற்கு நிறைய அளவுகோல் இருந்துள்ளது. ஒரு காலத்தில் அதிக பசு மாடுகளை வைத்து இருப்பவன் பணக்காரனாக இருந்தான், இப்போது அதற்கு அப்படியே எதிர்பதம்.

ஆனால் பணக்காரராக இருப்பதற்கு அளவுகோல் மாறினாலும், இன்னும் பணக்காரர்கள்தான் உலகை எப்படியோ கட்டுப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு சாதகமாகத்தான் உலகம் இயங்குகிறது. உலகில் உள்ள 10 பேர் மட்டும், இப்போதும் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

மன்ஸா முஸா யார்

மன்ஸா முஸா யார்

உலகில் உள்ள பணக்காரர்களில், மன்ஸா முஸா மிக முக்கியமான இடத்தில் உள்ளார். 1280-1337 வரை இவர் மாலி என்ற நாட்டில் வசித்து வந்தார். இப்போது அந்த நாடு, மேற்கு ஆப்ரிக்காவில் உள்ளது. இவரை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், டிம்புக்டாவின் அரசன் என்று அழைக்கிறார்கள். உலகில் அதிக அளவில் சொத்துக்களை தங்கமாக வைத்து இருந்த ஒரே நபர் இவர்தான். இவர் போர் படையில் 20 லட்சம் பேர் இருந்துள்ளனர். அதேபோல், இவரிடம் 4 லட்சம் வில் அம்புகள் இருந்துள்ளது. ஆனாலும் இவரின் சொத்து மதிப்பை துல்லியமாக கணக்கிட முடியவில்லை.

பணக்கார அகஸ்டஸ் சீசர்

பணக்கார அகஸ்டஸ் சீசர்

ரோமை ஆண்டு கொண்டு இருந்த அகஸ்டஸ் சீசர் உலகின் மிக பணக்கார அரசர்களில் ஒருவன் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவரது அப்போதைய சொத்து மதிப்பு 4.6 டிரில்லியன் டாலர் இருக்கும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இவரதுஅப்போதைய சொத்து மதிப்பு உலகின் மொத்த சொத்து மதிப்பில் 25 சதவிகிதம் வரை இருந்தது என்று கூறப்படுகிறது. அதேபோல் எகிப்தின் 90 சதவிகித நிலங்கள் இவருக்குத்தான் அப்போது சொந்தமாக இருந்ததாம்.

அரசர் சென்சாங்

அரசர் சென்சாங்

1048-1085 வரை சீனாவை ஆண்ட அரசர்தான் சென்சாங். உலகின் மொத்த ஜிடிபியில் 35-30 சதவிகிதம் வரை அப்போது இவர் வசம் இருந்தது. சீனா இப்போது இருப்பதை விட அப்போதுதான் வளமான நாடாக இருந்தது. உலகின் சூப்பர் பவர் நாடாக அப்போது சீனா இருந்ததாகவும் இவரின் ஆட்சி முடிந்த பின் கொஞ்சமா கொஞ்சமாக வளம் குறைந்தது என்று கூறுகிறார்கள். பணம் மொத்தம் அரசு குடும்பத்தில் குவிந்ததே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கிறார்கள்.

மன்னர் முதலாம் அக்பர்

மன்னர் முதலாம் அக்பர்

இந்த பட்டியலில் உள்ள இந்திய மன்னன்தான், முதலாம் அக்பர். 1542 முதல் 1605 வரை இந்தியாவை ஆண்ட, முக்கியமாக டெல்லியை சுற்றியுள்ள வடக்கு பிராந்தியத்தை ஆண்ட மன்னன் ஆவார். இவரின் அப்போதைய சொத்து மதிப்பு உலகின் மொத்த ஜிடிபியில் 25 சதவிகிதம் இருந்தது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இவர் மட்டுமில்லாமல் அப்போதைய மொகலாய சாம்ராஜ்யமே பெரிய அளவில் வளத்துடன் இருந்தது.

ஜோசப் ஸ்டாலின்

ஜோசப் ஸ்டாலின்

யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த பட்டியலில் இடம்பெற்று இருப்பவர்தான் ஜோசப் ஸ்டாலின். 1878-1953 வரை சோவியத் யுனியனை ஆண்டவர். அப்போது உலகின் மொத்த ஜிடிபியில் 9.6 சதவிகிதம், சோவியத் யூனியனிடம் இருந்தது. சோவியத்தின் பொற்காலம் அது, மொத்த சோவியத்தும் அப்போது ஸ்டாலின் கைவசம் இருந்தது. இவர் இருந்த சமயத்தில் அந்நாட்டின் உற்பத்தி 7.5 டிரில்லியன் டாலராக இருந்தது. அதே சமயம்இவருக்கு பின்பாக ரஷ்யாவின் பொருளாதாரம் மொத்தமாக மாறியதும் வரலாறு.

கோடீஸ்வரர் ஆண்ட்ரு கார்னேஜ்

கோடீஸ்வரர் ஆண்ட்ரு கார்னேஜ்

1835 முதலில் 1919 வரை அமெரிக்காவில் கோலோச்சிய பணக்காரர்தான், ஆண்ட்ரு கார்னேஜ். அவருடைய அப்போதைய சொத்து மதிப்பு 372 பில்லியன் டாலர். அமெரிக்காவில் இதுவரை இருந்த பணக்காரர்களேயே இவர்தான் '' பலே பலே பணக்காரர்'' என்று கூறுகிறார்கள். எல்லோரும் ராக்பெல்லர்தான் பணக்காரர் என்று கூறினாலும், அமெரிக்காவில் இருந்த பெரிய பணக்காரர்களை விட இவரது சொத்து மதிப்பு 2 சதவிகிதம் அதிகம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

பணக்காரர் ஜான் டி ராக்பெல்லர்

பணக்காரர் ஜான் டி ராக்பெல்லர்

1839-1937 அமெரிக்காவில் வாழ்ந்த ஜான் டி ராக்பெல்லர் இன்னொரு பணக்காரர் அவர். ஆண்ட்ரு வாழ்ந்த அதே காலத்தில்தான் இவரும் வாழ்ந்தார். அனால் ஜான் டி ராக்பெல்லர் கொஞ்சம் அவரை விட வளம் குறைந்தவர். ஆனால் உலகம் இவர்தான் அவரை விட பணக்காரர் என்று நம்பியது. இவரது சொத்து மதிப்பு 341 பில்லியன் டாலராக இருந்தது.

ஆலன் ரூபஸ் (எ) ஆலன் தி ரெட்

ஆலன் ரூபஸ் (எ) ஆலன் தி ரெட்

ஆலன் ரூபஸ் (எ) ஆலன் தி ரெட், இவர் 1040-1093 காலகட்டத்தில் வாழ்ந்தார். இவரது அப்போதைய சொத்து மதிப்பு 194 பில்லியன் டாலர் ஆகும். இவரது காலத்தில் இவரை விட பணக்காரர்கள் இருந்தாலும், இந்த பட்டியலில் இவரும் உள்ளார் . இங்கிலாந்தில் வாழ்ந்த இவர் கடைசி வரை சொத்துக்களை நிலையாக வைத்து இருந்தார். இங்கிலாந்தின் ஜிடிபியில் 7 சதவிகிதத்தை அவர் அப்போது கைவசம் வைத்து இருந்தார்.

மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ்

உனக்கு தெரிந்த பணக்காரர் யார் என்றால், சின்ன குழந்தை கூட பில் கேட்ஸ் என்று கூறும். அந்த பில் கேட்ஸும் இந்த பட்டியலில் உள்ளார். இவரது இப்போதைய சொத்து மதிப்பு 78.9 பில்லியன் டாலர் ஆகும். மைக்ரோசாப்ட் என்ற கற்பகவிருட்சம் அவருக்கு கோடிகளை வாரி வழங்குகிறது. ஆனால் சில சமயம் பெரிய சறுக்கல்களையும் சந்திக்கிறார்.

அரசன் செங்கிஸ்கான்

அரசன் செங்கிஸ்கான்

செங்கிஸ்கான், ஜெங்கிஸ்கான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் மங்கோலிய மன்னனின் உண்மையான பெயர் கெங்கிஸ்கான். உலகில் அதிக பகுதியை ஆண்ட ஒரே மன்னன் இவர்தான். ஐரோப்பா, சீனா, இந்தியாவின் வடகிழக்கு என்ற பல நாடுகளை சூறையாடி கைப்பற்றி இருக்கிறார். கொரில்லா தாக்குதலில் புதல்வன். இவரது சொத்து மதிப்பு யாருக்கு தெரியாது என்றாலும், உலகில் 45 சதவிகித நிலம் இவருக்கு சொந்தமானதுதானாம்.

English summary
Top ten richest people of all time in human history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X