For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவ்வளவு விஷயம் நடந்து இருக்கா.. 2017ல் டிவிட்டரில் என்ன பேசுனோம் தெரியுமா?

2017 முழுக்க இந்தியாவில் டிவிட்டரில் சில முக்கியமான விஷயங்கள் வைரல் ஆகி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: 2017 முழுக்க இந்தியாவில், டிவிட்டரில் சில முக்கியமான விஷயங்கள் வைரல் ஆகி இருக்கிறது. முதல்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த பல விஷயங்கள் டிவிட்டரில் வைரல் ஆனது.

சினிமாவில் தொடங்கி மக்கள் போராட்டம் வரை பல விஷயங்கள் டிவிட்டரில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக அரசியல் விஷயங்களும் பல டிவிட்டரில் விவாதிக்கப்பட்டுள்ளது.

எப்போதும் போல கிரிக்கெட் இந்த வருடமும் அதிக வைரல் ஆனது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டிவிட்டரில் சில விஷயங்கள் அதிகம் பேசப்பட்டது பேசப்பட்டது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

டிவிட்டரில் 'Justice for Jallikattu' என்ற ஆங்கில வார்த்தை முதல் இரண்டு மாதங்கள் வைரலாக இருந்தது. ஜனவரி, பிப்ரவரி முழுக்க இதுதான் முதல் இடத்தில் இருந்தது. மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் இந்த நூற்றாண்டில் நடந்த பெரிய போராட்டமாக பார்க்கப்படுகிறது. களத்தில் நடந்தை போலவே இணையத்திலும் பெரிய அளவில் இந்த போராட்டம் நடந்தது.

ஜிஎஸ்டி அறிமுகம்

ஜிஎஸ்டி அறிமுகம்

இந்த வருடம்தான் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பேச்சு தொடங்கியதில் இருந்து டிவிட்டரில் இந்த வார்த்தை வைரல் ஆனது. அதேபோல் இந்த வரிவிதிப்பு முறை நிறைவேற்றப்பட்ட அன்று உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. பின் இதில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போதும் இணையத்தில் வைரல் ஆனது. இந்த வருடம் முழுக்க இது குறித்து பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டப்பாவை கொன்னது யார்

கட்டப்பாவை கொன்னது யார்

பாகுபலி 2 படம் இந்த வருடம் வருவதற்கு முன்பே அதுகுறித்த பேச்சுக்கள் அதிகம் இருந்தது. முக்கியமாக கட்டப்பாவை கொன்னது யார் என்று சென்ற வருடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த வருடம்தான் பதில் கிடைத்தது. இந்த படம் ரிலீஸ் ஆன அன்று உலக டிரெண்டிங்கில் பாகுபலி 2 வார்த்தை இடம் பிடித்தது. மேலும் இந்த வருடத்தின் டாப் ஹிட் ஆனது.

மெர்சல் அரசன்

மெர்சல் அரசன்

மெர்சல் படம் இந்த அளவுக்கு இந்தியா முழுக்க வைரல் ஆகும் என்று படகுழுவிற்கு கூட தெரிந்து இருக்காது. தமிழக பாஜக கட்சியின் கோபமும், அதில் இருந்த ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் வசனங்களும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. முக்கியமாக இது குறித்து அனைத்து செய்தி சேனல்களிலும் விவாதங்கள் நடந்தது. இதன் காரணமாகவே இணையத்திலும் வைரல் ஆனது.

சாம்பியன் கோப்பை

சாம்பியன் கோப்பை

எப்போதும் போல கிரிக்கெட் போட்டி இந்த முறையும் இணையத்தில் வைரல் ஆனது. முக்கியமாக சாம்பியன்ஸ் கோப்பை போட்டி குறித்து பலரும் டிவிட்டரில் பேசி இருந்தார்கள். மேலும் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டியும் வைரல் ஆனது. அதேபோல் கிரிக்கெட் சம்பந்தமாக விராட் கோஹ்லியின் சாதனைகள் வைரல் ஆனது.

விருஷ்கா

விருஷ்கா

இந்த வருடத்தின் கடைசியில் சரியாக ஒருவாரம் முன்பு நடந்து இருந்தாலும் இதுதான் மிகப்பிரிய வைரல். பலரும் பல மாதங்களாக எதிர்பார்த்த திருமணம் என்று கூட சொல்லலாம். விராட் கோஹ்லி, அனுஷ்கா சர்மா திருமணம் இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் வைரல் ஆனா திருமணம் ஆகும். ஒரே வாரத்தில் விருஷ்கா என்ற வார்த்தை உலகம் முழுக்க பேமஸ் ஆனது.

குர்மீத் ராம் ரஹீம்

குர்மீத் ராம் ரஹீம்

தேரா சச்சா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் மீது 2002 ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததை அடுத்து தேரா சச்சா அமைப்பின் தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடைபெற்ற இந்த கலவரத்தால் மூன்று மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் இவரின் பெயர் டிவிட்டர் முழுக்க எதிர்பாராத வகையில் வைரல் ஆனது.

English summary
In 2017, India in twitter has talked about GST, Jallikattu, Mersal, Bahubali 2 and some more things. This is the only year when most of the south indian tags got viral in twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X