For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றால அருவி.. ஆர்ப்பரிக்குப்பின் அமைதி... சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு குறைந்துள்ள காரணத்தினால் குற்றாலத்தில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது-வீடியோ

    தென்காசி: குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ள காரணத்தினால் அங்கு குளிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

    தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதே சமயம் கேரளாவில் தென் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    Tourists allowed to take bath now in Coutrallam,

    இதனால் மெயினருவி, ஐந்தருவியில் என அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் பாதுகாப்பை வளைவையும் தாண்டி தண்ணீர் விழுந்தது. எனவே பாதுகாப்பு கருதி நேற்றிரவு அருவியில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்தனர். இதனால் ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று குறைந்தது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    The water in the cradle was slightly lower in Coutrallam. Following this, tourists are allowed to bathe in Main Falls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X