For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை குற்றாலத்தில் கனமழை.. பலத்த காற்று.. சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை

பலத்த மழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை-வீடியோ

    கோவை: கோவை குற்றாலம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டு உள்ளனர்.

    அடர்ந்த வன பகுதிக்குள் குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் காணப்படும் கோவையில் உள்ள கோவை குற்றாலம் அருவி தமிழகத்தில், சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. கோவை குற்றாலம் சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும்.

    Tourists ban to go to Kovai Coutralam

    இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அவ்வப்பொழுது மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம் பகுதிகளில், கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று குற்றாலம் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    மேலும் பலத்த காற்று வீசிவருவதால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு, தடை விதித்து வனத் துறையினர் உத்தரவிட்டு உள்ளனர். கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து அவ்வப்பொழுது மழை பெய்து வருகிறது.

    English summary
    Tourists ban to go to Kovai Coutralam because of Heavy Rain and Strong Wind.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X