For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு- சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

Google Oneindia Tamil News

குற்றாலம்: தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தின் முதன்மை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவிகளின் நகரமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் சீசன் களைகட்டி இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் சீசன் மந்தமாக காணப்பட்டது.

சாரல் மழை:

சாரல் மழை:

அவ்வப்போது பெய்த சாரல் மழையால் அருவிகளில் குறைவான தண்ணீரே விழுந்தது. நீர்வரத்தும் அதிகமாக இல்லை.

பயணிகள் ஏமாற்றம்:

பயணிகள் ஏமாற்றம்:

இதனால் நாடெங்கிலும் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் போதிய தண்ணீர் கொட்டததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதிகரிக்கும் மழை:

அதிகரிக்கும் மழை:

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்வதால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டத்தொடங்கியுள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கினர்.

வெள்ளப் பெருக்கு:

வெள்ளப் பெருக்கு:

நேற்று இரவுமுதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

 அருவியில் குளிக்கத் தடை:

அருவியில் குளிக்கத் தடை:

இதன் காரணமாக இன்று காலை 10 மணிக்கு மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மிதமான தண்ணீர் வரத்து:

மிதமான தண்ணீர் வரத்து:

ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் மிதமான தண்ணீர் வரத்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர்.

English summary
Tourist does not allowed to bath in Kutralam main falls because of heavy rain. On other small falls there is no restriction to the tourists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X