For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலக்கும் டொயோட்டா பார்ச்சூனர்.. இந்திய மக்களுக்கான பிரிமியமான எஸ்யூவி கார் இதோ!

டொயோட்டா பார்ச்சூனர் 7 சீட்டர் எஸ்யூவி கார் மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது.

சென்னை: டொயோட்டா பார்ச்சூனர் 7 சீட்டர் எஸ்யூவி கார் மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது.

7 சீட்டர் எஸ்யூவி கார் என்றவுடன் உங்கள் நினைவிற்கு முதலில் வருவது டொயோட்டா பார்ச்சூனர்தான். இந்திய மார்கெட்டில் இந்த கார் அவ்வளவு பிரபலமடைந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு டொயோட்டா பார்ச்சூனர் கார் அறிமுகமாகும்போதே ஆஃப் ரோடு செக்மெண்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டொயோட்டா நிறுவனம் சுமார் 1 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

Toyota Fortuner becomes a favorite SUV car for Indians

இந்த கார் லுக்கிலும், பெர்பார்மென்ஸிலும் மக்கள் மனதில் மிக முக்கியமான இடத்தை பிடித்தது. இந்த பார்ச்சூனர் எஸ்யூவி கார் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ற கார்தான். அதே நேரத்தில் இது சிட்டி போக்குவரத்து நெரிசலை எளிதாக கடக்கவும் உதவி செய்கிறது.

இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை 7 சீட்டர் காரில், 2.8 லிட்டர் டீசல் அல்லது 2.7 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷன்கள் உள்ளன. டீசல் இன்ஜின் 174.5 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது மேனுவல் கியர் பாக்ஸ் காரில் உள்ள இன்ஜினாகும்.

Toyota Fortuner becomes a favorite SUV car for Indians

மேலும் இந்த கார் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் மாடலுடனும் வருகிறது. இது 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். பெட்ரோல் இன்ஜினை பொறுத்தவரை 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனையாகிறது.

டொயோட்டா பார்ச்சூனர் காரின் டீசல் வேரியன்ட் கார் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் விற்பனையாகிறது. இதனால் எவ்வளவு கரடு முரடான பாதைகளாக இருந்தாலும், அதை இந்த கார் எளிதாக கடந்து விடும். இதற்கு முக்கிய காரணம் 29 டிகிரி அப்ரோச் மற்றும் 25 டிகிரி டிபார்ச்சர் ஆங்கிள் தான் மேலும் இந்த காரில் உள்ள ஆல் வீல் டிரைவ், லோ ரேஞ்ச் மற்றும் ஹை ரேஞ்ச் ஆகிய மோடுகளை கொண்டிருக்கிறது. இதனால் தளர்வான நிலப்பகுதி, சவாலான நிலப்பரப்புகளை எளிதாக சமாளிக்கும்.

Toyota Fortuner becomes a favorite SUV car for Indians

இந்த கார் பார்க்க பெரியதாக இருக்கும். ஆனால் அந்த ரக கார்களுக்கான சிறப்பான மைலேஜை வழங்குகிறது. இதன் பெட்ரோல் வேரியன்ட் கார் லிட்டருக்கு 10 கி.மீ. வரையிலும், டீசல் வேரியண்ட் கார் லிட்டருக்கு 12-14 கி.மீ வரையிலும் மைலேஜை வழங்குகிறது.

இந்த டொயோட்டா பார்ச்சூனர் கார் பிரீமியம் எஸ்யூவியாகவும், சொகுசான உட்கட்டமைப்பு வசதியுடனும், வருகிறது. கருப்பு மற்றும் பழுப்பு நிற டூயல் டோன் கேபின் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டேஷ்போர்டு சில்வர் கலர் அசென்ட்களையும், உட்டன் ட்ரிம்களையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த காரில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வசதி உள்ளது. இதில் நேவிகேஷன், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ ரியர் கூலர், க்ரூஸ் கண்ட்ரோல், பெரிய எம்ஐடி, கூல்டு அப்பர் க்ளவ் பாக்ஸ் மற்றும் க்ரோம் அசென்ட்ஸ் உடன் கூடிய கூல் ப்ளூ காம்பிமீட்டர் ஆகிய வசதிகளும் இருக்கின்றன. இந்த காரில் எக்கோ மற்றும் பவர் ஆகிய இரண்டு விதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. இது காரின் சிறப்பான பெர்பார்மென்ஸை வெளிப்படுத்த உதவும்.

Toyota Fortuner becomes a favorite SUV car for Indians

இந்த காரில் உள்ள சாஃப்ட் ஆன சீட்கள், மெட்டாலிக் அசென்ட்கள், மரப்பலகை டிசைனில் வடிவமைக்கப்பட்ட அழகு பொருட்கள், உட்புறம் ஒரு பார்ச்சூனர் காருக்கான சிறப்பை உணர வைக்கும்.

இரண்டாம் வரிசை சீட்டிற்கான 60:40 சீட் பிரிவு ஒரு டச் இயக்கத்தில் மாற்றி மூன்றாவது வரிசை சீட்டில் ஏறக்கூடியதாக இருக்கிறது. இந்த பார்ச்சூனர் காரில் 7 பேர் சுலபமாக பயணிக்கலாம். மக்களும் 3 வரிசை சீட்கள் உடைய கார்களையே அதிகம் விரும்புகின்றனர்.

Toyota Fortuner becomes a favorite SUV car for Indians

டொயோட்டா பார்ச்சூனர் கார் அந்த செக்மெண்டில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராகவும் இருக்கிறது. இதில், 7 ஏர் பேக்குகள், வாகன ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட், ஐஎஸ்ஓ பிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் 4 வீல் டிரைவ் மாடலில் டவுண் ஹில் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

Toyota Fortuner becomes a favorite SUV car for Indians

நீங்கள் பெரிய 7 சீட்டர் கொண்ட எஸ்யூவி காரை வாங்க வேண்டும் என நினைத்தால் உங்களுக்கு சிறந்த சாய்ஸாக இருப்பது டொயோட்டா பார்ச்சூனர் கார்தான். இதன் ஆஃப் ரோடு பெர்பார்மென்ஸ், அதிக இடம் கொண்ட உட்புற வசதி, பிரீமியம் கார்களில் உள்ள வசதிகள் என உங்கள் மனங்களை இந்த கார் நிச்சயம் கவரும்.

Toyota Fortuner becomes a favorite SUV car for Indians

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X