For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களுடைய வாழ்க்கையையும் பாருங்க.... சேப்பாக்கம் வியாபாரிகள் புலம்பல்!

காவிரி பிரச்னைக்காக சென்னையில் நடக்க உள்ள கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிப்பது, எதிர்ப்பு தெரிவிப்பது தேவையில்லாதது. இதனால் எங்களுடைய வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய நலனையும் பார்க்க வேண்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு நிறைய விதிமுறைகள்- வீடியோ

    சென்னை: காவிரி பிரச்னைக்காக சென்னையில் நடக்க உள்ள கிரிக்கெட் போட்டிக்கு தடை கோருவது, எதிர்ப்பு தெரிவிப்பது தேவையில்லாதது. இதனால் எங் களுடையவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய நலனையும் பார்க்க வேண்டும் என்று, சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள வியாபாரிகள் கூறியுள்ளனர்.

    ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சென்னை சேப்பாக் கம்மைதானத்தில் இன்று இரவு நடக்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டோணி தலைமையிலான சிஎஸ்கே அணி திரும்பியுள்ளதால், ரசிகர்கள் இடையேபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Traders fume over protest against IPL match

    இந்தப் போட்டிக்கான டிக்கெட்டை பெறுவதற்கு கடும் போட்டி இருந்தது. சுமார், 38 ஆயிரம் பேர் அமரக் கூடிய மைதானத்துக்கு தற்போது பிளாக்கில் கூட டிக்கெட் கிடைக்காது. பலரும் போட்டிப் போட்டு டிக்கெட் வாங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் காவிரி பிரச்னை தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள், சில அமைப்புகள், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று கூறியுள்ளன. அவ்வாறு மீறி போட்டி நடந்தால் போராட்டம் நடக்கும் என்றும் எச்சரித்துள்ளன. அதனால், ஆயிரக்கணக்கான போலீஸ், அதிரடிப் படை சேப்பாக்கம் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டியைக் காண வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், இந்தப் போராட்டத்தால், தங்களுடைய வருமானம் போய்விட்டது என்று, சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள வியாபாரிகளும், சாலையோரம் கடைபோடும் சீசன் வியாபாரிகளும் புலம்பியுள்ளனர். காவிரி பிரச்னை, நம்முடைய பிரச்னைதான். இல்லை என்று சொல்லல. காவிரி டெல்டா விவசாயிகளுக்காக போராட்டம் நடத்துபவர்கள், எங்களுடைய வாழ்க்கையையும் பார்க்க வேண்டும். இந்த போராட்டங்களால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எப்போதாவதுதான் போட்டி நடக்கிறது. இந்த போராட்டங்கள், எதிர்ப்புகளால், போலீஸ் கட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதனால், எங்களுடைய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது' என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

    "சார் நானும் தமிழன்தான். தமிழ் உணர்வு உள்ளவன்தான். காவிரி விவசாயிகளுக்காக போராடுவதில் தவறில்லை. அதில் ஏன் கிரிக்கெட்டை சேர்க்கிறார்கள்.அரசியலில் விளையாட்டை சேர்க்காதீர்கள், " என்கிறார் கிரிக்கெட் ரசிகரான சாப்ட்வேர் இன்ஜினியர் மனோஜ். கையில் டிக்கெட் வைத்திருந்தும், போட்டி நடக்குமா என்று திக் திக்குடன் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    English summary
    Chepauk traders fume over protest aginst the chennai IPL match
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X