For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி பிரச்சினை : செப்.16ல் தமிழகம் முழுவதும் கடையடைப்பு - வணிகர் சங்கம் அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை: காவிரி பிரச்சனையை முன்வைத்து தமிழகத்தில் வரும் 16-ம் தேதி
கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காவிரி பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தைக் கண்டித்து, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வரும் 16ம் தேதி முற்றுகை, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என, காவிரி போராட்டக் குழு அறிவித்துள்ளது.

Traders to shut the shops on Sep 16 in Tamil Nadu

தமிழக அரசு உரிய காலத்தில் காவிரி நீரைப் பெற்றுத் தரவில்லை. காவிரி பிரச்னையில் மத்திய அரசு மெளனம் காக்கிறது. எனவே, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றம் வழங்க உத்தரவிட்டுள்ள தண்ணீர் போதுமானது அல்ல என்பதால், கூடுதல் தண்ணீரை பெறுவதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கக் கோரியும் செப்டம்பர் 16ம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது.

இதில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மத்திய கலால் வரி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டமும், மருத்துவக் கல்லூரி சாலையில் மறியல் போராட்டமும், திருவாரூர் வெங்கக்குடியில் உள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டமும், திருவாரூர் - மன்னார்குடி சாலையில் மறியல் போராட்டமும், நாகை பனங்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முன் முற்றுகைப் போராட்டமும், கிழக்குக் கடற்கரை சாலையில் மறியல் போராட்டமும் நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் கடையடைப்பு போராட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு இதர வர்த்தக சங்கங்களும் ஆதரவளிக்க விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்றும் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். 16ம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு ஓட்டல்கள், லாரி ஓட்டுனர் சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu traders have announced a shut down on Sep 16th against Karnataka violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X