For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரிக்காக வலுக்கும் போராட்டம்: இன்று வணிகர்கள் கடையடைப்பு: சிவகாசி பட்டாசு ஆலை மூடல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

காவிரி பங்கீட்டுக்காக திட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசுக்கு 6 வார காலக்கெடு வழங்கியும் அதை மத்திய அரசு செய்யவில்லை. திட்டம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் என்றும் இருக்கலாம் என்பது தமிழக அரசின் வாதம்.

ஆனால் திட்டம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் என்பது மட்டுமே அர்த்தம் இல்லை என்று உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தது. இதனால் தமிழகத்தில் மேலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

சாலை மறியல்

சாலை மறியல்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தை நடத்தின. சென்னையில் மட்டும் 30 இடங்களில் இதுபோன்ற போராட்டங்கள் நடத்திய நிலையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று கடைகள் இல்லை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி இன்று தமிழ்நாடு ஓட்டல் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம் உள்பட 58 அமைப்புகள் கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.

பட்டாசு ஆலை மூடல்

பட்டாசு ஆலை மூடல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. வணிகர்கள் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து 900 பட்டாசு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பந்த்

தமிழகம் முழுவதும் பந்த்

இந்நிலையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 5-ஆம் தேதி பந்த் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரிக்காக தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

English summary
Traders Union calls for protest against Centre demanding to form Cauvery Management Board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X