For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலம்பம், உறியடி, ஆடுபுலியாட்டம், கில்லி, தாயக்கட்டை விளையாட்டுகளுக்கு 'தனிவிழாக்கள்': தமிழக அரசு

By Mathi
Google Oneindia Tamil News

Traditional TN games will be developed: Minister
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், உறியடி, ஆடுபுலியாட்டம், கில்லி, பம்பரம், தாயக்கட்டை ஆகியவற்றை ஊக்கப்படுத்த தனி விழாக்கள் நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுந்தரராஜ் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:

பாய்மர படகோட்டுதல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் உள்ளது. எனவே, தமிழ்நாட்டின் பாய்மர படகோட்டும் வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தயார்படுத்திக்கொள்வதற்காக பெரிதாக கூடிய இரண்டு ரப்பர் படகுகள் ரூ.40 லட்சம் செலவில் வாங்கப்படும்.

பல நூற்றாண்டுகளாக தமிழக மக்களால் விளையாடப்படும் பாரம்பரியமிக்க விளையாட்டுகளான சிலம்பம், உறியடி, தாயக்கட்டை, ஆடுபுலி ஆட்டம், கிளியாந்தட்டு, பல்லாங்குழி, கில்லி, நொண்டி, பம்பரம், கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகள் நவீன விளையாட்டுகளால் நலிவடைந்து வருகிறது.

இவற்றை மேம்படுத்தும் நோக்கில் நான்கு மாவட்டங்களில் இந்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கான விழா நடத்தப்படும். இந்த விளையாட்டுகளை பாதுகாத்து உயர்த்துவதற்காகவும், ஆவணப்படுத்துவதற்காகவும் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

தடகள விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகளை அளிக்க, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் மாநில விளையாட்டு உதவும் மையத்தில் மருத்துவ மற்றும் உடலியக்க மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சுந்தரராஜ் கூறினார்.

English summary
In a boost to practitioners of traditional games in Tamil Nadu, which are on the wane in the face of modern sports, the state government today announced that these games would be developed and that Rs 10 lakh had been allocated for the purpose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X