For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறைந்தபட்ச மனசாட்சி கூட இல்லாத சமுதாயம் இது.. வந்துடுங்கோ.. டிராபிக் ராமசாமி மகள் உருக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியிடம் இதற்குமேல் மற்றவர்களுக்காக போராட வேண்டாம் திரும்பி வந்துவிடுங்கள் என்று அவருடைய மகள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

டிராபிக் ராமசாமி அன்றாட விஷயங்களில் கூட போராட முடியாமல் தவிப்பவர்களின் பிரதிநிதி. சென்னையில் ஒழுங்குமுறை இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வைத்தது, தறிகெட்டு ஓடிய மீன்பாடி வண்டிகளுக்கு தடையாணை பெற்றது என இவர் சாதித்தவை ஏராளம். அதற்காக இவர் கொடுத்த விலையும் மிக மிக அதிகம். பலமுறை தாக்குதலுக்குள்ளானார். காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

Traffic ramasamy daughter request him to return home

எல்லாவற்றுக்கும் மேலாக தனது குடும்பத்தையே பிரிந்தார். 40 ஆண்டுகளாக குடும்பத்துக்கும் அவருக்கும் பெரிதாக பிணைப்பு இல்லை. எப்போதாவது வீட்டில் தலைகாட்டினால் உண்டு. ஒரே மகள் விஜயா. திருமணமாகி கணவர், 2 குழந்தைகளுடன் வசிக்கிறார். டிராபிக் ராமசாமியின் மனைவியும் அவர்களுடனே தங்கியுள்ளார்.

இதுகுறித்து தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு விஜயா அளித்த பேட்டியில், "அப்பான்னு ஒருத்தர் இருக்கறதையே டிவி, நியூஸ் பேப்பர்ல பார்த்துதான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. அதுவும் நல்லபடியாக தகவல் வருவதில்லை. டிராபிக் ராமசாமி மீது ரவுடிகள் தாக்குதல், காவல் துறையினர் கைது நடவடிக்கை இப்படித்தான் தகவல் வருது. எந்த நேரமும் பதைபதைப்பா இருக்குங்க. நிம்மதியா தூங்க முடியலை. சரியாக சாப்பிட முடியலை.

நான் குழந்தையா இருந்தப்பவே அப்பா வீட்டுல தங்க மாட்டார். பொதுப் பிரச்சினைன்னு சுத்திட்டே இருப்பார். அதனால தனிமையிலதான் வளர்ந்தேன். அம்மாவுக்கும் பெருசா விபரம் தெரியாது. இடையிடையே பிரச்சினை வேற. கும்பலா வந்து வீட்டை அடிச்சி, நொறுக்கிட்டுப் போவாங்க. காது கூசுற அளவுக்கு திட்டிட்டுப் போவாங்க. கண்டதை எல்லாம் வீட்டுக்குள்ள எறிவாங்க. நாங்க ஆச்சாரமான குடும்பம். எல்லாத்தையும் தாங்கிண்டோம்.

அப்ப நான் வயசுப்பொண்ணு. வெளியே தலைகாட்ட முடியலை. உசுரை கையில பிடிச்சிட்டு இருந்தோம். வேற வழியில்லாமதான், நம்மால நம்ம குடும்பத்துக்கு பிரச்சினை வேண்டாம்னு அப்பா வீட்டை விட்டு வெளியேறிட்டார். 40 வருஷம் ஆச்சு. சிறுநீரகக் கோளாறுன்னு மூணு வருஷத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து தங்கினார். வந்துட்டாரேன்னு சந்தோஷப்பட்டோம். ஆனா, 6 மாசம்கூட அவரை இருக்க விடலை. கோயில் ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்டார்ன்னு 300 பேர் கும்பலா வந்து வீட்டை தாக்கிட்டுப் போனாங்க. திரும்பவும் கிளம்பிட்டார்.

அவர் எங்கே தங்குறார், எங்கே தூங்குறார், எங்கே சாப்பிடுறார்ன்னு எதுவுமே தெரியலை. நானும் அம்மாவும் ஜெயலலிதா ரசிகைகள். ஜெயலலிதான்னா அம்மாவுக்கு ரொம்ப இஷ்டம். அவங்க ஆட்சியில தான் அதிகாலை நாலு மணிக்கு வெறும் லுங்கியோட எங்க அப்பாவை கைது செஞ்ச கொடுமை நடந்திருக்கு.

மாடியில இருந்து இறக்கி கூட்டிப்போக பொறுமை இல்லாம மூணாவது மாடியிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருக்காங்க. மருத்துவமனையில் யூரின் டியூபை கழட்டி எறிஞ்சிருக்காங்க. அவருக்கு செக்யூரிட்டி போட்டிருக்காங்கங்கிறது எல்லாம் சும்மாங்க. அந்த செக்யூரிட்டிக்கே இன்னைக்கு பாதுகாப்பு இல்லை.

கடைசியாக உங்க மூலமா அப்பாகிட்ட ஒரு கோரிக்கை வைக்கிறேன். அப்பா, ஒரு பொம்பளைப் புள்ளைக்கு அப்பான்னா எவ்வளவு ஆசை இருக்கும். அதுவும் ஒத்தப் பிள்ளை நான். அதைக்கூட ஆராதிக்க உங்களுக்கு நேரம் இருந்ததில்லை. எனக்கு நினைவு தெரிஞ்சு, நீங்க என்னை தூக்கிக் கொஞ்சினது இல்லை. ஒரு முத்தம் கொடுத்திருக்கீங்களா?

வேண்டாம்ப்பா.. இந்த நாட்டை திருத்தவே முடியாது. இங்கே யாருக்கும் குறைந்தபட்ச மனசாட்சி கூட கிடையாது. டிவிட்டரில், வாட்ஸ் அப்பில் பாராட்டுவாங்க. ஆனா, பிரச்சினைன்னா விட்டுட்டு ஓடிடுவாங்க. பணம், காசு எதுவும் எங்களுக்கு வேண்டாம். நீங்க உசுரோட வந்தா அதுபோதும். என்னைதான் தூக்கி வெச்சி கொஞ்சலை. உங்க பேரப் பிள்ளைங்க ரொம்ப எதிர்பார்க்குது. வந்துடுங்கப்பா...'' என உருக்கமாக பேசியுள்ளார் விஜயா.

இதுகுறித்து டிராபிக் ராமசாமி, "அவங்களுக்கு பிரச்சினை வேண்டாம்னுதான் குடும்பத்தைவிட்டு ஒதுங்கிட்டேன். எனக்கு மட்டும் பாசம் இல்லையா? ஆனா, அவங்க மட்டுமா என் குடும்பம்? இந்த சமூகமே என் குடும்பம் இல்லையா. நான் பெத்த குழந்தைகளை படைச்சவன் பார்த்துப்பான்" என்று அமைதியாக கூறியுள்ளார்.

English summary
Traffic ramsamy daughter ask him to return to home and leave the society problems, she request him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X