For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிராபிக் ராமசாமியை நீக்கியதா ஜனசக்தி ஊழல் ஒழிப்பு இயக்கம்? மாறி மாறி புகார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜனசக்தி ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் கௌரவத் தலைவர் பதவியில் இருந்து டிராபிக் ராமசாமியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தான் நீக்கப்படவில்லை என்றும் தனது பெயரைப் பயன்படுத்தி ஜனசக்தி ஊழல் ஒழிப்பு இயக்கம் பணம் சம்பாதிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார் டிராபிக் ராமசாமி.

லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, ஜனசக்தி என்ற புதிய இயக்கம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கௌரவத்தலைவராக டிராபிக் ராமசாமி நியமிக்கப்பட்டார்.

Traffic Ramasmay removed anti corruption Movement

இன்று காலை திருச்சியில் நடந்த ஜனசக்தி ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் டிராபிக் ராமசாமியை கௌரவத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து டிராபிக் ராமசாமி போட்டியிடுகிறார். இடைத்தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் டிராபிக் ராமசாமி.

கௌரவத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள், டிராபிக் ராமசாமியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, பதிலளித்த அவர், 2014 டிசம்பரிலேயே தான் ஜனசக்தி ஊழல் ஒழிப்பு இயக்க தலைவர் பதவியில் இருந்து ராமசாமி ராஜினாமா செய்துவிட்டதாக, இப்போது நீக்கப்பட்டதாக கூறுவது சரியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கௌரவத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள், டிராபிக் ராமசாமியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, பதிலளித்த அவர், ஜனசக்தி இயக்க தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படவில்லை என்று கூறினார். 2014 டிசம்பர் மாதமே பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறிய டிராபிக் ராமசாமி, தன் பெயரை பயன்படுத்தி ஜனசக்தி ஊழல் ஒழிப்பு இயக்கம் பணம் சம்பாதிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

English summary
Noted social worker and candidate of R.K.Nagar byelection Traffic Ramasamy has been removed from Janasakathi anti corruption movement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X