For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெயர், அட்ரஸ், போட்டுள்ள சட்டை, பேன்ட், கண்ணாடியைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லாத டிராபிக் ராமசாமி!

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அதில் போட்டியிடும் 3 முக்கிய வேட்பாளர்களின் விவரத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு.. நீங்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வாக்களிக்கத் திட்டமிட்டிருந்தால் உங்களுக்கும் கூட இது பயன் உள்ளதாக இருக்கலாம்.

ஆர்.கே.நகரில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மட்டுமே முக்கியக் கட்சிகளாக களத்தில் நிற்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மூத்த தலைவர் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயலலிதா களம் கண்டுள்ளார். மற்றவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்படாத குட்டிக் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆவர்.

Traffic Ramsamy has nothing as asset

இதில் டிராபிக் ராமசாமி மட்டுமே பெரிய சுயேச்சை ஆவார். இவர் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று பேசும் அளவுக்கு சற்று முக்கியஸ்தர் டிராபிக் ராமசாமி.

டிராபிக் ராமசாமி தனது வேட்பு மனுவோடு சேர்த்துத் தாக்கல் செய்திருந்த சொத்துக் கணக்கு உள்ளிட்டவை குறித்த அபிடவிட்டைப் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது. காரணம், எல்லாக் கட்டத்திலும் Nil என்ற வார்த்தையே இருந்தது. அவரது, பெயர், முகவரியைத் தவிர வேறு எந்த இடத்திலும் எதுவுமே நிரப்பப்படவில்லை. எல்லாமே Nil Nil மட்டுமே. டிராபிக் ராமசாமியின் அபிடவிட்.

அவரிடம் சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை. ஒரு ஜீப் மட்டுமே உள்ளது. அதுவும் கூட இரவல் ஜீப்பாம். மனைவி இல்லை (பிரிந்து விட்டார்), தனது குழந்தைகள் குறித்த விவரத்தைக் கூட அவர் குறிப்பிடவில்லை. தனது சமூக சேவை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வந்தவர் டிராபிக் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சொத்துக்களாக நாம் கருதுவதாக இருந்தால் செல்போன், ஜிமெயிலில் உள்ள இமெயில் ஐடி ஆகியவற்றைத்தான். சொந்தமாக பேஸ்புக்கில் கூட இல்லை இந்த மனுஷன்!

இவர் இதுவரை வருமான வரி கட்டியதில்லை. காரணம், வருமானமே இருந்ததில்லை.

அப்புறம், இவர் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். வேப்பேரி, நுங்கம்பாக்கம், சட்டக் கல்லூரி காவல் நிலையங்கள் மற்றும் கரூர் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.

வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது கையில் 2200 ரூபாய் மட்டுமே வைத்திருந்தார். வங்கிக் கணக்கிலோ வெறும் 500 ரூபாய்தான்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், டிராபிக் ராமசாமியுடன் ஒப்பிடும்போது பெரிய "கோடீஸ்வரர்". எல்லாக் காலத்திலும் நிரப்ப மேட்டர் வைத்திருக்கிறார். மகேந்திரனின் அபிடவிட்.

அடுத்து ஜெயலலிதா.. சொல்வதற்கு என்ன இருக்கிறது... பார்த்துத் தெரிஞ்சிக்கோங்க!

தேர்தல் கமிஷனில் ஜெயலலிதா தாக்கல் செய்த அபிடவிட்

English summary
Noted social worker and RK Nagar candidate Traffic Ramsamy has nothing as asset according to his affidavit filed with EC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X