For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் வழித்தடம் நாளை முதல் மாற்றம்: திருச்சி-விழுப்புரம் இடையே தற்காலிக ரத்து

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்கள் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பில், "விருத்தாச்சலம்-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் விருத்தாச்சலம்-திருவெண்ணெய்நல்லூர் இடையேயான பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Train roots chages from tomorrow on wards

மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு இருமார்க்கமாகவும் இயக்கப்படும் பயணிகள் ரயில், நாளை முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை திருச்சி-விழுப்புரம் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

மும்பையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் லோக்மான்யாதிலக் - மதுரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (11043), நாளை விழுப்புரம், கடலூர் போர்ட் ஜங்ஷன், விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும். அதேபோல, மறுமார்க்கத்தில் மதுரை - லோக்மான்யாதிலக் (11044) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை விருத்தாச்சலம், கடலூர் போர்ட் ஜங்ஷன், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16352), நவம்பர் 1 ஆம் தேதியன்று விருதாச்சலம், கடலூர் போர்ட் ஜங்ஷன், விழுப்புரம் வழியாகவும், நவம்பர் 5 ஆம் தேதி திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாகவும் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16127), நவம்பர் 2 ஆம் தேதி விழுப்புரம், கடலூர் போர்ட் ஜங்ஷன், விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் நவம்பர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையிலான நாட்களில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12636), நவம்பர் 2 ஆம் தேதி விருத்தாச்சலம், கடலூர் போர்ட் ஜங்ஷன், விழுப்புரம் வழியாகவும், 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையில் திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாகவும் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
TN train roots will change from tomorrow onwards due to Viruthachalam - Vilupuram dual track work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X