For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக ரயில்களில் இனி புதிய கட்டணம் எவ்வளவு.. சென்னையில் இருந்து பிற ஊர் கட்டண விவரம்!

Google Oneindia Tamil News

சென்னை: புதிய கட்டண உயர்வுக்கு பிறகு தமிழக ரயில்களில் எவ்வளவு (தோராயமாக முன்பதிவு கட்டணத்துடன் சேர்த்து) கட்டணம் இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

பயணிகள் ரயில் கட்டணம் இன்று அதிகாலை முதல் கிலோமீட்டருக்கு 1 காசு முதல் 4 காசு வரை உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு பின் தமிழக ரயில்களில் எவ்வளவு கட்டண மறுபாடு வந்துள்ளது என்பதை முன்பதிவு கட்டணத்துடன் சேர்த்து தோராயமாக இப்போது பார்க்கலாம்.

சென்னையில் இருந்து மதுரை, கோவை, நெல்லை ஆகிய ஊர்களுக்கு கட்டண விவரங்கள் சராசரியாக 15 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

பயணிகள் ரயில் கட்டணம் அதிரடியாக உயர்வு.. இன்று முதல் அமலுக்கு வந்தது பயணிகள் ரயில் கட்டணம் அதிரடியாக உயர்வு.. இன்று முதல் அமலுக்கு வந்தது

வைகை எக்ஸ்பிரஸ்

வைகை எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2ம் வகுப்பு உட்காரும் வசதி இருக்கையில் பயணிக்க முன்பு பழைய கட்டணம் 165 ஆக இருந்தது. இனி ரூ.180 ஆக இருக்கும். ஏசி சேரில் முன்பு 605 ஆக இருந்த கட்டணம் இனி 665 ஆக இருக்கும்.

தேஜாஸ் கட்டணம்

தேஜாஸ் கட்டணம்

இதேபோல் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் முன்பு 285 ஆக இருந்தது. இனி 315 ரூபாய் ஆக இருக்கும். 3ம் வகுப்பு ஏசி கட்டணமும் 745 ரூபாயில் இருந்து 815 ரூபாயாகவும், 2ம் வகுப்பு ஏசி கட்டணம் 1045 ரூபாயில் இருந்து 1150 ஆகவும், முதல் வகுப்பு ஏசி கட்டணம் 1760ல் இருந்து 1940 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னை மதுரை இடையே இயக்கப்படும் தேஜாஸ் ரயிலில் ஏசி சேர்கார் கட்டணம் 955 ரூபாயில் இருந்து 1035 ஆக உயர்ந்துள்ளது.

அனந்தபுரி ரயில்

அனந்தபுரி ரயில்

சென்னை நெல்லை இடையே நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2ம் வகுப்பு படுக்கை கட்டணம் 350 ரூபாயில்இருந்து 385 ஆக உயந்துள்ளது. 3ம் வகுப்பு ஏசி கட்டணம் 920 ரூபாயில் இருந்து 1010 ஆகவும் 2ம் வகுப்பு ஏசி கட்டணம் 1300 ரூபாயில் இருந்து 1430 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையில் இருந்து நெல்லைக்கு 2ம் வகுப்பு படுக்கை கட்டணம் 320 ரூபாயில் இருந்து 355 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

கோவை எக்ஸ்பிரஸ்

கோவை எக்ஸ்பிரஸ்

சென்னை கோவை இடையே ரயில் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளது. கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2ம் வகுப்பு உட்காரும் வசதி கட்டணம் 165 ரூபாயில் இருந்து 180 ரூபாய் ஆகவும், ஏசி சேர் கார் கட்டணம் 605 ரூபாயில்இருந்து 665 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது.

கட்டணம் எவ்வளவு

கட்டணம் எவ்வளவு

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2ம் வகுப்பு படுக்கை கட்டணம் 285 ரூபாயில் இருந்து 315 ரூபாய்ஆகவும், ஏசி 3ம் வகுப்பு 745 ரூபாயில் இருந்து 815 ரூபாய் ஆகவும், ஏசி 2ம் வகுப்பு கட்டணம் 1045 ரூபாயில் இருந்து 1150 ஆகவும், ஏசி முதல் வகுப்பு 1760 ரூபாயில் இருந்து 1940 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது.

இன்று முதல் உயர்வு

இன்று முதல் உயர்வு

புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 12 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. பயணிகள் ரயில் கட்டண உயர்வு என்பது பொதுமக்களுககு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
New train ticket fare from chennai to madurai and chennai to nellai , chennai to coimbatore , ticket fare details here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X