For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் டிக்கெட்டுகளில் தமிழில் பயண விவரம்... அமலுக்கு வந்தது புதிய நடைமுறை!

தமிழகத்தில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம், இந்தியுடன் மாநில மொழியான தமிழிலும் பயண விவரங்கள் அச்சிட்டு அளிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ரயில் டிக்கெட்டுகளில் தமிழில் பயண விவரம்

    சென்னை : தமிழகத்தில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம், இந்தியுடன் மாநில மொழியான தமிழிலும் பயண விவரங்கள் அச்சிட்டு அளிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த முறைக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் ரயில்வே துறையை நவீனப்படுத்த பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி ரயில் நிலையங்களில் கணினி மயமாக்கப்பட்ட தகவல் சேவை மையம், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள், இலவச வைபை, எஸ்கலேட்டர், லிப்ட் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    Train tickets in Tamilnadu now carries regional language information printed in it

    இதே போன்று பயணிகள் ரயில் டிக்கெட்டுகளில் சிறிது மாற்றம் கொண்டுவர ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. இதன்படி ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டு வந்த ரயில் பயணிகளுக்கான டிக்கெட்டுகளில் ஊரின் பெயர்களை அந்தந்த மாநில மொழிகளில் அச்சிடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

    கர்நாடக மாநிலத்தில் முதன்முதலாக கடந்த மார்ச் மாதம் இந்த முறை நடைமுறைக்கு வந்தது. பெங்களூரு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான டிக்கெட்டில் ஊர் பெயர்களை கன்னட மொழியில் அச்சிட்டு வழங்கப்பட்டது அந்த மாநில மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் பொது பிரிவு ரயில் டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட்டுகளில் ஊர் பெயர்கள் தமிழில் அச்சிட்டு வழங்கும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆங்கிலம், இந்தி மொழியுடன் தமிழ் மொழியிலும் பயண விவரம் மட்டும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. ஆங்கிலம், இந்தி தெரியாத உள்ளூர் பயணிகளுக்கு இது மிகவும் உதவியானதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    English summary
    Train tickets printed in a local language apart from English and Hindi came into action from today, suburban train passengers welcomed the step.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X