For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதெல்லாம் "மஸ்ட்"... பள்ளி வாகனங்களுக்கு 22 கட்டாய விதிகள்... போக்குவரத்துத்துறை வெளியீடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பள்ளி வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசின் போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வி மற்றும் வருவாய் துறைகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பான முறையில் மாணவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறையோடு செயல்படும் தமிழக அரசு இந்த விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி பள்ளிக்கூட வாகனங்களில் உள்ள மாணவர்கள் உட்காரும் இருக்கைகளின் உயரம் குறைக்கப்பட வேண்டும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

Transport department released 22 rules for school vans

வாகனங்களின் வடிவமைப்பு உறுதியானதாக இருக்க வேண்டும் அவசர கால நேரங்களில் வாகனங்களில் இருந்து எளிதாக வெளியேறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

மாணவிகள் பயணிக்கும் வண்டியில் கண்டிப்பாக பெண் உதவியாளர் இருக்க வேண்டும்.

அனுபவமிக்க டிரைவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்பட 22 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அனைத்து பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களும் இந்த 22 விதிமுறைகளை பின்பற்றி உறுதிப்படுத்தும் வகையில் போக்குவரத்து துறையிடம் இருந்து 30 ஆ தேதிக்குள் உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்த பரிசோதனையின் போது ஏதாவது குறைபாடு இருந்தால் 1 வார காலம் அவகாசம் கொடுக்கப்படும்.

அதிலும் இந்த குறைபாடு சரி செய்யப்படவில்லை என்றால் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகமும் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்வப்போது பரிசோதனை நடத்துவார்கள்.

அதில் சிறு விதிமீறல் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
School educational department and transport department announced 22 rules for school vehicles in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X