For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

50 ஆண்டு பழமையான மருதமரம்.. அடியோடு விழுந்தது.. பாபநாசம் கோவில் பக்தர்கள் பீதி!

Google Oneindia Tamil News

Recommended Video

    50 ஆண்டு பழமையான மருதமரம்.. அடியோடு விழுந்தது-வீடியோ

    நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள கோவில் முன்பு உள்ள 50 ஆண்டு கால பழமையான மருத மரம் அப்படியே கீழே விழுந்து விட்டது.

    மரம் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளானது. மரத்தை அப்புறப்படுத்துவதில் பெரும் போராட்டமாகி விட்டது.

    Tree falls in front of Papanasam temple

    நெல்லை மாவட்டம் பாபநாசம் திருக்கோவில் முன்பு 50 ஆண்டுகள் பழமையான மருத மரம் உள்ளது. இந்த மரம் மதியம் ஒரு மணி அளவில் திடீரென்று கீழே விழுந்தது.

    இதில் மரத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த பைக், நடைபாதைக் கடைகள் சேதமடைந்தன. ஒரு பெண், குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Tree falls in front of Papanasam temple

    போலீஸார் மற்றும் கோவில் ஊழியர்கள் சேர்ந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக அப்புறப்படுத்தும் பணி நீடித்தது. மரத்தை அறுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    கோவில் முன்பு இருந்த மரம் திடீரென விழுந்ததால் அதை அபசகுனமாக கருதுகின்றனர் மக்கள். என்ன ஆகுமோ, என்ன நடக்கப் போகுதோ என்ற பரபரப்பும் நிலவுகிறது.

    English summary
    A 50 year old Marutha maram fell in front of Papanasanathar temple in Papanasam, Nellai dt. Devotees feel this as a bad sign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X