For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலைதடுமாறி கட்டுப்பாட்டு டவர் மீது மோதிய ஏர்இந்தியா விமானம்.. திருச்சியில் பரபரப்பு!

திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் சிறிய விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் சிறிய விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

திருச்சியில் இருந்து அந்த ஏர்இந்தியா விமானம் துபாய் நோக்கி சென்றுள்ளது. உள்ளே 130 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்துள்ளனர்.

இந்த விமானம்தான் தற்போது விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இது தற்போது மும்பையில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.

[சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தற்கொலை!]

 என்ன ஆனது

என்ன ஆனது

திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முடிவில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமான ஏடிசி டவர் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மீது மோமதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி கொஞ்சம் சுற்று சுவரில் இடித்துள்ளது.

துரிதமான முடிவு

ஆனால் விமானத்தை மீண்டும் திருச்சியில் தரையிறக்க முடியாத சூழ்நிலை நிலவி உள்ளது. இதனால் விமானம் மும்பை நோக்கி திருப்பப்பட்டது. விமானிகள் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை மும்பைக்கு கொண்டு சென்றனர்.

 எப்படி இருக்கிறார்கள்

எப்படி இருக்கிறார்கள்

மும்பையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரிய சேதம், விபத்து தவிர்க்கப்பட்டது. உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 130 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.

 விசாரணை நடக்கும்

விசாரணை நடக்கும்

இது குறித்து விசாரணை செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் விமானம் உரசிய பகுதியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு செய்தார். விபத்திற்கு என்ன காரணம் என்று விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

English summary
Trichy AirIndia flight bound to Dubai took emergency landing in Mumbai after got hit in ALS tower.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X