பலாத்கார வழக்கு: திருச்சி முன்னாள் துணைமேயர் ஆசிக் மீராவுக்கு டிஎன்ஏ டெஸ்ட்!
திருச்சி: இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணைமேயர் ஆசிக் மீராவிற்கு நீதிமன்ற உத்தரவுப்படி மரபணு சோதனை நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் மரணமடைந்த பின்னர் அவருடைய மகனாக ஆசிக் மீராவுக்கு திருச்சி மாநகராட்சியின் துணைமேயா் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த துர்கா என்கிற துர்கேஸ்வரி என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா ஆசிக்மீரா தான் என்று குற்றம் சாட்டினார்.
என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று என்னை ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிவிட்டு, என்னை ஏமாற்றிவிட்டார் என்று புகார் மனு கொடுத்தார். இந்த நிலையில் பொன்மலை மகளிர் காவல் நிலையத்தினர் ஆசிக்மீராவின் மீது பலாத்காரம், ஏமாற்றுதல் என்று 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஆசிக்மீராவை துணைமேயர் பதவியிலிருந்து தூக்கியடித்தார் ஜெயலலிதா.

சமரச முயற்சி
இந்த நிலையில் ஆசிக் மீராவிற்கு முன் ஜாமீன் மனு அளித்த மதுரை உயர் நீதிமன்றம், அவர் ஒரு வாரம் மதுரை காந்தி மியூசியத்தில் தங்கி சேவை செய்யசொல்லி உத்தவிட்டார். இதற்கு இடையில் இரண்டு பேருக்கு சமரச முயற்சியை நீதிமன்றமே எடுத்தது.

ஒத்துக் கொண்ட ஆசிக் மீரா
இதில் ஆசிக்மீரா, துர்காவுக்கு பிறந்த குழந்தை என்னுடையது தான். நான் அவரை திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் தனிக்குடித்தனம் நடத்துகிறேன் என்று உத்தரவாதம் கொடுத்தார்.

ஏமாற்றிய ஆசிக் மீரா
ஆனால் தூர்கேஸ்வரியோ.. எனக்கு தனிக்குடித்தனம் தேவையில்லை. என்னை திருமணம் செய்து அவருடைய வீட்டிலே தங்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க இந்த கோரிக்கையை ஆசிக்மீரா நிராகரித்தார். இதனால் மேல் நடவடிக்கை எடுக்க சொல்லி தூர்கேஸ்வரி மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்.

மரபணு பரிசோதனை
நீதிமன்றம் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆசிக்மீராவும், துர்கேஸ்வரிக்கும் மரபணுசோதனை செய்ய உத்தரவிட்டது. ஆனால் இரண்டு முறை நீதிமன்ற உத்தரவுக்கு செவிசாய்க்காமல் ஆஜர் ஆகாமல் தவிர்த்து வந்தார் ஆசிக்மீரா.

ஜாமீன் ரத்தாகும் என எச்சரிக்கை
இதனால் கோபம் அடைந்த நீதிபதி அடுத்த முறை சம்மனுக்கு மட்டும் ஆசிக்மீரா ஆஜர் ஆகவில்லை என்றால் அவருடைய ஜாமீனினை ரத்து செய்வேன் என்று சொல்லி. இந்த முறை கிராமநிர்வாக அதிகாரி மூலம் மரபணுசோதனைக்கு நோட்டிஸ் அனுப்பினார்.

மரபணு சோதனைக்கு மறுப்பு
நீதிமன்ற நிர்பந்தத்தால் தான் இந்த சம்மனை பெற்றுகொள்கிறேன் என்று சொல்லி சம்மனை பெற்றுக்கொண்டு இன்று காலை ஜே.எம். 5 நீதிமன்றத்தில் ஆஜர் ஆன ஆசிக்மீரா, மேடம் எனக்கு மரபணு சோதனை வேண்டாம். இந்த குழந்தை எனக்கு பிறந்தது தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

நடவடிக்கை தேவை
ஆனால், துர்கேஸ்வரியோ... ஆசிக் மீரா தன்னை ஏமாற்றிவிடுவார் என்றும் எனவே சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். தான் மரபணுசோதனைக்கு தயார் என்று கூறினார். உடனே மரபணுசோதனைக்காக ஆசிக்மிராவையும், துர்கேஸ்வரியையும் அழைத்து செல்ல பொன்மலை போலிஸாருக்கு உத்தரவிட்டார். வேறுவழியில்லாமல் மரபணுசோதனைக்கு கலங்கிய கண்களுடன் போலீசாருடன் சென்றார் ஆசிக்மீரா.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications