For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சியில் முஸ்லிம் லீக் இளம் பிறை பேரணி துவங்கும் இடம் மாற்றம்

By Chakra
Google Oneindia Tamil News

திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் டிசம்பர் 28ம் தேதி நடைபெறுகின்றது.

இதையொட்டி முஸ்லிம் லீக் மாணவரணி (MSF), இளைஞர் அணி (MYL) , தொழிலாளர் அணியினர் (STU) பல்லாயிரக்கணக்கில் பங்கேற்கும் "இளம் பிறை பேரணியும்' நடக்கிறது.

பெரும் எண்ணிக்கையில் செயல் வீரர்கள் பங்கேற்பதையொட்டி, காவல்துறை உயர் அதிகாரிகள் கேட்டுகொண்டதற்கிணங்க, ஏற்கனவே அறிவித்த இடத்திற்கு பதிலாக திருச்சி, தில்லை நகர் சாலைரோடு, கோஹினூர் தியேட்டர் அருகில் இருந்து ‘இளம்பிறை எழுச்சி பேரணி' புறப்பட்டு தென்னூர் உழவர் சந்தை மைதானத்தை சென்றைடையும் என்று திருச்சியில் இன்று நிருபர்களைச் சந்தித்த தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபுபக்கர் தெரிவித்தார்.

இப்பேரணியில் பங்கேற்பதை தவறவிட்டு விடாத வகையில் எவரும் தரும் தவறான தகவலையோ அல்லது வாகனங்களை தடுப்பதையோ பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் மேற்குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தமிழக முஸ்லிம்கள் தங்களது உரிய பிரதிநித்துவத்தைப் பெறுவதை இம்மாநாடு உறுதி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Trichy IUML conference: Venue of starting place of rally shifted

மாநாட்டு திடலையும் அவர் பார்வையிட்டார். பேட்டியின் போது மாநில செயலாளர் ஷாஜஹான் (கல்விப்பணி), நெல்லை மஜீத் (அமைப்பு செயலாளர்), மாநில துணைச் செயலாளர் திருச்சி G.M. ஹாஷிம் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் V.M.ஃபாரூக், செயலாளர் K.M.K. ஹபீபுர் ரஹ்மான், ஆடுதுறை ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.

English summary
Indian Union Muslim League is holding a massive political awareness public meeting and rally at Trichy on December 28. Lakhs of Muslims from various parts of Tamil Nadu and all over the the country are expected to participate in the event. The venue of starting place of rally is shifted to Thillai Nagar near Kohinoor theatre, said IUML general secretary KAM Abubakkar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X