For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சின்னம் பறிபோக சீனியர்களின் உள்ளடி வேலை காரணம்.. கோபத்தில் டிடிவி தினகரன்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் நடந்த உள்ளடி வேலைகளால்தான் இரட்டை இலை சின்னத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என யாரோ காதில் கடித்து வைக்க, கடும் கோபத்தில் உள்ளாரம் கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

ஆர்கேநகர் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் அடுத்தது சிஎம் பதவிதான் என கனவு கண்டார் தினகரன். சசிகலாவுக்கே இதில் விருப்பம் இல்லை என கூறப்பட்ட நிலையில் வேட்பாளராக தனது பெயரை தானே தேர்ந்தெடுக்க வைத்தார்.

எம்ஜிஆரின் உறவுக்கார பெண்ணை வேட்பாளராக நிறுத்தி சென்டிமென்டாக காய் நகர்த்த திட்டமிட்டிருந்த சசிகலாவுக்கே இது ஷாக்காகத்தான் இருந்ததாம்.

முதல்வருக்கு கஷ்டம்

முதல்வருக்கு கஷ்டம்

தினகரனின் நடவடிக்கையால் அதிகம் அதிர்ச்சியானது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். வாராது வந்த மாமணிபோல கிடைத்த முதல்வர் பதவியை எளிதில் விட்டுக்கொடுக்க அவர் என்ன அரசியல் சன்னியாசியா? தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் புலம்பி தள்ளிவிட்டாராம் மனிதர்.

அதிகார தோரணை

அதிகார தோரணை

திடீரென கட்சிக்குள் வந்து, ஒரே நாளில் துணை பொதுச்செயலாளரும் ஆன, டிடிவி தினகரன் தங்களையெல்லாம் ஆட்டிப் படைப்பதை அமைச்சரவை சகாக்களும் விரும்பவில்லை. தினகரனின் கேலிப்பேச்சுக்களும், அதிகார தோரணையும் அவர்களையெல்லாம் ஏதோ செய்தபடியே இருந்ததாம்.

உள்ளடி வேலை

உள்ளடி வேலை

இந்த பின்னணியில்தான் உள்ளடி வேலைகள் ஆரம்பித்துள்ளன. நேரடியாக எதையாவது செய்யப்போனால் தெரிந்துவிடும் என்பதால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும் என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனராம், சீனியர்கள். இதனால்தான் இரட்டை இலை கைவிட்டு போய்விட்டதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கோபம்

கோபம்

எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை போன்றோர் ஒரே ஜாதியினர். லோக்சபா துணை சபாநாயகராக உள்ள தம்பிதுரை டெல்லி அரசியலில் 20 வருடங்களுக்கும் மேல் அனுபவம் உள்ளவர். ஆனால், இரட்டை இலையை தக்க வைப்பதில் அவர் சுணக்கம் காட்டியதாக சந்தேகிக்கிறாராம் தினகரன். இதனால் எகிறி விழ ஏற்கனவே கோபத்திலுள்ள சீனியர்கள் இன்னும் கடும் கோபத்திற்கு போயுள்ளார்களாம்.

English summary
TTV Dinakaran angry over AIADMK senior leaders after party symbol freezed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X