இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்.. டிடிவி தினகரனுடன் தொடர்புகொண்டவர்கள் பட்டியல் ரெடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் லஞ்சம் பெற்ற சுகேஷ் சந்திரசேகருக்கு யார், யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

"சுகேஷ் சென்னையிலும், டெல்லியிலும் யாரையெல்லாம் சந்தித்தார், என்ன டீலிங் பேசப்பட்டது என்பது குறித்த பட்டியலை தயார் செய்துள்ளோம்" என டெல்லி போலீஸ் துணை கமிஷனர் சஞ்சய் ஷெராவத், தெரிவித்துள்ளார்.

TTV Dinakaran bribery case: Delhi police knows who Sukesh met before striking deal

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பதை தவிர டிடிவி தினகரனுக்கு வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளது டெல்லி போலீஸ். நாளையே டிடிவி தினகரன் போலீசார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்றும் டெல்லி போலீசார் கெடுபிடியாக கூறிவிட்டனர்.

இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்காக, டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க சுகேஷ் சந்திரசேகர் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Delhi crime branch police who are probing the bribery case involving TTV Dinakaran have prepared a list of people who Sukesh Chandrasekhar met. The investigating officers said that accused Sukesh Chandrasekhar met many indviduals in Chennai before he spoke to TTV Dinakaran about bribing election commission officials.
Please Wait while comments are loading...