For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரன் கோஷ்டி கொடுத்த பெரும்பாலான 2000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாமே.. ஷாக்கில் ஆர்.கே.நகர்!

ஆர்கே நகர் தொகுதி மக்கள் தினகரன் மீது கடும் கோபத்தில் உள்ளனராம். தினகரன் கோஷ்டி கொடுத்த ரூ2,000 நோட்டுகளில் பெரும்பாலானவை கள்ளநோட்டுகள் என்பதுதான் இந்த கொந்தளிப்புக்கு காரணமாம்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு தினகரன் கோஷ்டி கொடுத்த ரூ2,000 நோட்டுகள் பெரும்பாலும் கள்ள நோட்டுகள் என தெரியவந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆர்கே நகரில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனத்தால் அதிமுக(அம்மா) அணி வேட்பாளர் தினகரன் பணத்தை வாரி இறைத்து வருகிறார். எத்தனை நூதன வழிகள் இருக்கிறதோ அத்தனையையும் முழுவீச்சில் பயன்படுத்தி பணப்பட்டுவாடா செய்து வருகிறது தினகரன் கும்பல்.

ஓட்டுக்கு ரூ.4,000

ஓட்டுக்கு ரூ.4,000

வீடு வீடாக போய் ஓட்டுக்கு ரூ4,000 என 2,000 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுகிறது தினகரன் கும்பல். இது தொடர்பான வீடியோக்கள் வெளிவந்தும் கூட தினகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பெரும்பாலும் கள்ள நோட்டுகள்

பெரும்பாலும் கள்ள நோட்டுகள்

இந்த நிலையில் தினகரன் கோஷ்டி கொடுத்த ரூ2,000 நோட்டுகளில் பெரும்பாலானவை கள்ள நோட்டுகள் என புகார் கிளம்பியுள்ளன. மளிகை கடைகளில் இந்த ரூபாய் நோட்டை கொடுத்த உடனே இது கள்ள நோட்டு என விரட்டியடித்து விடுகிறார்களாம்.

கொந்தளிப்பில் வாக்காளர்கள்

கொந்தளிப்பில் வாக்காளர்கள்

கள்ளநோட்டை கொடுத்து ஓட்டை வாங்கும் தினகரனின் தில்லுமுல்லு ஆர்கே நகர் தொகுதி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளதாம். கண்ணில்படுகிற தினகரன் அடியாட்களையும் பொதுமக்கள் வறுத்தெடுத்து வருகிறார்களாம்.

பீதியில் தினகரன்

பீதியில் தினகரன்

இதனால் வாக்காளர்கள் கண்களில் படாமல் தப்பித்து ஓடுவதில்தான் தினகரன் அடியாட்கள் குறியாக இருக்கின்றனராம். கள்ளநோட்டு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சும்மா விடாது என்பதால் பீதியில் இருக்கிறாராம் தினகரன்.

English summary
RK Nagar Voters alleged that the Rs2,000 notes which was issued by TTV Dinakaran team, are fake currencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X