For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ட்ரியோ ட்ரியோ ட்ரியோ டுர்ர்ர்ர்.. குதிரைக்காரன் தொப்பி அணிந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த தினகரன்!!

ஆர்கே.நகர் தொகுதியில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் டிடிவி.தினகரன் தொப்பி அணிந்து வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தொப்பி சின்னத்தில் போட்டியிடும் அவர் தொப்பி அணிந்து வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு வேட்பாளராக டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தரப்பில் மதுசூதனன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இரட்டை இலைச்சின்னத்துக்கு போட்டிப்போட்டதால் அதனை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்கம்பத்தையும் சசி அணிக்கு தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

தினகரன் வேட்புமனுத்தாக்கல்

தினகரன் வேட்புமனுத்தாக்கல்

இநந்லையில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது அவரது சின்னத்தை அடையாளப்படுத்தும் வகையில் தினகரன் தொப்பி அணிந்து வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்தியாவிலேயே முன்மாதிரி

இந்தியாவிலேயே முன்மாதிரி

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன் இந்தியாவிலேயே முன்மாதிரி தொகுதியாக ஆர்கே.நகரை மாற்றுவேன் என்றார். ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றும் டிடிவி தினகரன் உறுதி தெரிவித்தார்.

இரட்டை இலை முடக்கப்பட்டது சதி

இரட்டை இலை முடக்கப்பட்டது சதி

பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என்றும் அவர் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார். இரட்டை இலை முடக்கப்பட்டது சதிதான் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

தொப்பி சின்னம்

தொப்பி சின்னம்

தேர்தல் ஆணையம் ஒதுக்கிய ஆட்டோ சின்னத்தை சசிகலா தரப்பு ஏற்கமறுத்ததால் அவர்களுக்கு இரண்டாவது முறையாக தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
TTV.Dinakaran filed his nomination today in RK Nagar constituency. he wor hat on his head while nominating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X