For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சியை கவிழ்ப்பதில் தீவிரம்.. நாளை கூர்க் ரிசார்ட்டுக்கு விரைகிறார் தினகரன்!

கூர்க் விடுதியில் தங்கியுள்ள ஆதரவு எம்எல்ஏக்களை நாளை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கூர்க்: ரிசார்ட்டில் தங்கியுள்ள ஆதரவு எம்எல்ஏக்களை நாளை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது குறித்து சபாநாயகர் விளக்கம் கோரியும் எம்எல்ஏக்கள் நேற்று நேரில் விளக்கம் அளிக்கவில்லை.

விளக்கம் அளிக்க அவர்கள் அவகாசம் கோரிய நிலையில் அதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார். இந்நிலையில் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூர்க் ரிசார்ட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

தடை தங்களுக்கு சாதகம்தான்

தடை தங்களுக்கு சாதகம்தான்

அப்போது தன்னை அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார். 20ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பது தங்களுக்கு சாதகம் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து மூளைச்சலவை

தொடர்ந்து மூளைச்சலவை

மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் குடும்பத்தினர் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் தங்களை மூளைச் சலவை செய்து தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

உள்நோக்கம் கொண்டது

உள்நோக்கம் கொண்டது

குடியரசு தலைவரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை நீக்கும் முயற்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார்.

நாளை கூர்க் செல்கிறார் டிடிவி

நாளை கூர்க் செல்கிறார் டிடிவி

மேலும் கூர்க் ரிசார்ட்டில் தங்கியுள்ள ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் நாளை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார். சபாநாயகர் தனபால் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டதாக கூறியுள்ள நிலையில் தினகரன் கூர்க் செல்லவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியை கவிழ்க்க ஆலோசனை

ஆட்சியை கவிழ்க்க ஆலோசனை

அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பது குறித்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தலாம் என தெரிகிறது. இன்னும் ஒருவாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழ்க்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
TTV Dinakaran going to meet Support MLAs in coorg resort tomorrow. MLA Thanga tamilselvan said this to press in coorg. TTV Dinakaran may discuss about to dissolve the govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X