For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியகுளம் எம்.பி முதல் ஆர்.கே.நகர் எம்எல்ஏ வரை.. டிடிவி தினகரனின் பீனிக்ஸ் அரசியல்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளாராக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் இன்று சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பதவியேற்ற பின் டிடிவி தினகரன் கொடுத்த பர பர பேட்டி- வீடியோ

    சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளாராக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் இன்று சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

    சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் 3 மகன்களில் ஒருவர் டிவி தினகரன். சசிகலா மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானார்.

    கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

    கட்சியிலும் பதவி

    கட்சியிலும் பதவி

    இதைத்தொடர்ந்து 2004ஆம் ஆண்டு லோக் சபா எம்பி பதவிக்காலம் முடிந்ததையடுத்து ராஜ்சபா எம்பியகா தேர்வு செய்யப்பட்டார். கட்சியிலும் பொருளாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.

    ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார்

    ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார்

    ஆனால் சிங்கப்பூர் சிட்டிசன் என்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளும் தினகரன் மீது அந்நிய செலவாணி மோசடி உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கினார்.

    பதவி கொடுத்த சசிகலா

    பதவி கொடுத்த சசிகலா

    ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து விரட்டப்பட்டவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா டிடிவி தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார்.

    ஆட்சிக்கு ஆட்டம்

    ஆட்சிக்கு ஆட்டம்

    இதையடுத்து தனக்கென சில எம்எல்ஏக்களை ஆதரவாக வைத்துக்கொண்டு அதிமுக ஆட்சிக்கு ஆட்டம் காண்பித்து வருகிறார். இரட்டை இலைச்சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    எம்எல்ஏவாக பதவியேற்பு

    எம்எல்ஏவாக பதவியேற்பு

    தற்போது ஜாமீனில் வந்துள்ள தினகரன் அதிமுகவை எதிர்த்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். 89 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற அவர் இன்று சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    English summary
    TTV Dinakaran has taken charge as RK Nagar constituency MLA. TTV Dinakaran taking charge MLA as first time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X