For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா முன்னேற்றகழகம் ஆட்சியை பிடிக்கும்- மேலூரில் மாஸ் காட்டிய டிடிவி தினகரன்

ஆர் கே நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று தனது அமைப்பின் பெயரை அறிவித்தார். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    அம்மா முன்னேற்றகழகம் ஆட்சியை பிடிக்கும்- டிடிவி தினகரன்- வீடியோ

    மதுரை: அம்மா முன்னேற்றகழகம் ஆட்சியை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். இரட்டை இலை, அஇஅதிமுகவை மீட்போம் என்று மேலூரில் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை அறிவித்து 108 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றி வைத்து மாஸ் காட்டியுள்ளார் டிடிவி தினகரன்.

    ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்று அறிவித்தார். 9 மணிக்கே அமைப்பின் பெயரை அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சரியாக 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் புதன் ஓரையில் அமைப்பின் பெயரை அறிவித்தார்.

    கறுப்பு வெள்ளை சிவப்பில் ஜெயலலிதா உருவம் பொறித்த கொடியை மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். 108 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார் டிடிவி தினகரன். சட்டசபையில் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்த அதே நேரத்தில் மேலூரில் லட்சக்கணக்கானோர் மத்தியில் பேசினார் டிடிவி தினகரன்.

    கட்சி, சின்னம் முடக்கம்

    கட்சி, சின்னம் முடக்கம்

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்சி கொடி முடக்கப்பட்டது. அதிமுக அம்மா பெயரில் நாம் இயங்கினோம். நவம்பர் மாதம் மதுசூதனன் அன்கோவிற்கு கட்சி, சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுத்தது. சசிகலாவின் வழியில் சென்ற நாமும் ஒன்றரை கோடி தொண்டர்களும் இத்தனை நாட்களாய் கொடி, அமைப்பின் பெயர் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வந்தோம்.

    குக்கர் சின்னம்

    குக்கர் சின்னம்

    ஆர். கே. நகரில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டோம். நமக்கு வெற்றியைத் தேடித்தந்து குக்கர் சின்னம்தான். அந்த குக்கர்தான் உதயசூரியனை டெபாசிட் இழக்கச் செய்தது. இரட்டை இலை தப்பிப்பிழைத்தது. வெற்றிச்சின்னமாம் குக்கர் சின்னத்தை நமக்கு ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கட்சிக்கொடியில் ஜெயலலிதா

    கட்சிக்கொடியில் ஜெயலலிதா

    அதே போல நாம் கேக்கும் கட்சியை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுநாள் பெயரில்லாமல் செயல் பட்ட நாம் இன்று முதல் நமது தொண்டர்கள் அனைவரும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பின் கீழ் செயல்படுவோம் என்று மூன்று முறை கூறினார். கொடியை அறிமுகம் செய்து வைத்த தினகரன் ஜெயலலிதா உருவம் பொறித்த இந்த கொடியை வைத்தும் செயல்படுவோம்.

    கட்சி, சின்னத்தை மீட்போம்

    கட்சி, சின்னத்தை மீட்போம்

    எந்த தேர்தலாக இருந்தாலும் இனி இதுதான் நமக்கு கொடி. அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஆட்சியை பிடிக்கும். இதன் கீழே செயல்பட்டு அஇஅதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் துரோகிகளிடம் இருந்து மீட்போம் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

    சிங்கம் பரிசளிப்பு

    சிங்கம் பரிசளிப்பு

    அமைப்பின் பெயர் அறிவிக்க ஏற்பாடு செய்த கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை கூட்டி மாஸ் காட்டினார். தேனீக்கள் போல, எறும்புகள் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார் டிடிவி தினகரன். மேடையில் டிடிவி தினகரனுக்கு வெள்ளி வேல் பரிசாக அளித்தார் வெற்றிவேல். அதேபோல சிங்கத்தை பரிசளித்தனர். இதனையடுத்து 108 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார் டிடிவி தினகரன்.

    பெரியார் டூ டிடிவி

    பெரியார் டூ டிடிவி

    மேடையில் இருந்த பிளக்ஸ் போர்டில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் சசிகலா புகைப்படமும் அவர்களுக்கு நிகராக டிடிவி தினகரன் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. தலைவர்களின் கட் அவுட்களுடன் டிடிவி தினகரன் கட் அவுட்டும் பிரம்மாண்டமாக இடம் பெற்றிருந்தது. ஜெயலலிதாவைப் போல வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று பாடலுடன் விழாவை முடித்தார் டிடிவி தினகரன்.

    English summary
    We will win all upcoming elections from now by using latest name and party flag, we will also try to retrieve the two leaves symbol, till then will use cooker symbol said TTV Dinakaran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X