எனது வீீட்டு மீது யார் குண்டு வீச முயன்றிருப்பார்கள் தெரியுமா? டிடிவி தினகரன் பேட்டி
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்க கூடும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி:
வெடித்தது பெட்ரோல் வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனும் குண்டா என்பதை கண்டறிய வேண்டும் என்று காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

எதற்காக குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. அதை காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட முறையில் யாரும் எதிரிகள் கிடையாது. கட்டப்பஞ்சாயத்து கிடையாது, நிலத்தகராறு கிடையாது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் இதை செய்திருக்க கூடும்.
உருவ பொம்மையை எரித்ததாகவும் அதனால் கார் சேதமடைந்ததாகவும் கூறப்படவது தவறு. புல்லட் பரிமளம் கார் டிரைவர் எதையோ கொளுத்துவதும், அதையடுத்தே கார் வெடிப்பதும் அதில் தெளிவாக உள்ளது. இதுபற்றி போலீஸ் விசாரிக்க வேண்டும். இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் அடையாறு பகுதியிலுள்ள, தினகரன் வீடு அருகே நின்றிருந்த இன்னோவா காரில் குண்டு வெடித்ததில், தினகரன் கார் டிரைவர் உட்பட மூவர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரை ஓட்டி வந்த டிரைவர்தான் குண்டை வெடிக்க செய்ததாகவும் தெரிகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications