For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் 8 வழி சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம்

எட்டு வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: எட்டு வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் - சென்னை இடையே பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எட்டுவழிச்சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த எட்டு வழிச்சாலை சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படுகிறது.

விவசாயிகள் எதிர்ப்பு

விவசாயிகள் எதிர்ப்பு

இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தினகரன் ஆர்ப்பாட்டம்

தினகரன் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் எட்டு வழிச்சாலைக்கு விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துடிப்பது ஏன் என கேள்வி

துடிப்பது ஏன் என கேள்வி

அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அக்கட்சியினர் முழக்கமிட்டனர். அப்போது பேசிய டிடிவி தினகரன் மக்கள் கேட்காத திட்டங்களை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் துடிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மாற்றி பேசி வருகிறார்

மாற்றி பேசி வருகிறார்

8 வழிச்சாலைக்கு அவசர அவசரமாக நிலம் எடுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 8 வழிச்சாலை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழினிச்சாமி மாற்றி மாற்றி பேசி வருவதாகவும் அவர் கூறினார்.

English summary
TTV Dinakaran and his party members protesting in Thiruvannamalai against salem - Chennai highway project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X