For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலாவை நீக்குவதாக சொன்ன வைத்திலிங்கம் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்.... தினகரன் அதிரடி!

அதிமுக அம்மா அணியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வைத்திலிங்கம் எம்.பி.யை நீக்கி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக அம்மா அணியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கத்தை நீக்கி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவின் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி இணைந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் தலைமைக் கழகத்தில் ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கம் கட்சியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பொதுக்குழுவை விரைவில் கூட்டி இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

TTV Dinakaran removes Vaithilingam from AIADMK

ஆனால் இது அவரின் தனிப்பட்ட கருத்து என்று ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜீ உள்ளிட்டோர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் மட்டுமின்றி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வைத்திலிங்கம் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
TTV Dinakaran today removed Vaithilingam MP from the AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X