For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிசிடிவி கேமராக்கள் நிறுத்தி வைத்த விவகாரம்: நாங்கள் ஏதும் செய்யவில்லை- டிடிவி தினகரன்

சிசிடிவி கேமராக்களை நிறுத்தி வைத்த விவகாரத்தில் நாங்கள் ஏதும் செய்யவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சிசிடிவி கேமராக்களை நிறுத்தி வைத்த விவகாரத்தில் நாங்கள் ஏதும் செய்யவில்லை என்றும் அதுகுறித்து அப்பல்லோதான் விளக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

TTV Dinakaran says that Apollo should explain about removal of CCTV

இந்நிலையில் சசிகலா அண்மையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறப்பு வரை நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார் என தெரிகிறது.

இதுதொடர்பாக சென்னையில் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருந்த பகுதியில் சிசிடிவி கேமராவை துரதிருஷ்டவசமாக நிறுத்தி வைத்திருந்தோம் என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை அவருடன் இருந்தவர்கள் தீர்மானித்தனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் கேரமா நிறுத்தி வைப்பு குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறுகையில் சிசிடிவி கேமராக்கள் நிறுத்தி வைத்தது குறித்து அப்பல்லோதான் பதில் கூற வேண்டும். கேமரா நிறுத்தி வைத்ததில் நாங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் கவலைப்பட ஒன்றுமில்லை என்றார் டிடிவி தினகரன்.

English summary
TTV Dinakaran says that Apollo should explain about removal of CCTV camera in the ward where Jayalalitha gets treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X