For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

100 நாட்கள் போராட்டத்துக்கு வெற்றி... தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு- வீடியோ

    தூத்துக்குடி: 100 நாட்களாக போராடி வந்த மக்கள் வெற்றி பெறும் வகையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 100 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளின்போது பேரணி சென்ற மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    Tuticorin Collector puts seal the Sterlite industry

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அரசாணையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரிகளுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்றார். அங்கு ஆலையை மூட வேண்டும் என்ற அரசாணையை அவர் முன்பே ஆலை கேட்டில் அதிகாரிகள் ஒட்டினர். பின்பு அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

    100 நாட்களாக போராடி வந்த மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. இதை முன்கூட்டியே செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் 13 உயிர்கள் பலியாகியிருக்காது.

    English summary
    Tuticorin Collector Sandeep Nandhuri seals the Sterlite industry after TN Government issues GO to close the same.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X