For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள் அதிரடி பறிமுதல்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நூதன முறையில் வேறு பெயரில் கடத்தி வரப்பட்ட துபாய் சிகரெட்சை சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

துபாய் துறைமுகமான ஜபால் அலியில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு கப்பலில் கண்டெய்னர் வந்தது. தூத்துக்குடியை சேர்ந்த ஒரு ஷிப்பிங் நிறுவனம் பேக்கிங் பேப்பர்களை இறக்குமதி செய்துள்ளதாக அந்த கண்டெய்னர்களுக்குரிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tuticorin customs officials confiscate cigarette pockets

இதில் சந்தேகம் அடைந்த சுங்க துறையினர் உதவி கமிஷனர் ப்யூஸ் பரத்வாஜ் தலைமையில் அந்த கண்டெய்னரில் அதிரடி சோதனை நடத்தினர். அதற்குள் சில பெட்டிகளில் மட்டும் பேக்கிங் ரோல்கள் இருந்தன.

அதன் பின்னர் வேறு பெட்டிகள் இருப்பதை பார்த்த சுங்க துறையினர் அவற்றை திறந்து சோதனையிட்ட போது அதில் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் வெளிநாட்டில் இருந்து சிகரெட் இறக்குமதி செய்யும் போது அதில் விலைக்கு பாதியாக வரி விதிக்கப்படுவதால் பேப்பர் ரோல் என்ற பெயரில் திருட்டு தனமாக கடத்தி வரப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தலா 20 சிகரெட்டுகள் கொண்ட 50 பக்கெட்டுகள் விதம் 200 பெட்டிகளில் இருந்த 20 லட்சம் சிகரெட்டுகளை சுங்க துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.32 கோடியாகும். இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும் சுங்க துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Tuticorin Customs officials confiscated illegal import cigarette pockets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X