For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை வாங்க மறுப்பு

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

Tuticorin firing: Relatives of demised refuses to get back the bodies

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து சந்தேகம் இருப்பதால் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அப்பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் 7 உடல்களுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இன்று மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் அவர்கள் உடல்களை வாங்க மறுத்துவிட்டனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக தூத்துக்குடி முன்னாள் எஸ்.பி, ஆட்சியர் மீது வழக்கு பதிய கோரிக்கை விடுத்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை கோரியும் உறவினர்கள் உடல்களை வாங்க மறுத்துவிட்டனர்.

மேலும் எஞ்சிய 12 பேரது உடல்களையும் ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்வோம் என உறவினர்கள் அறிவித்துவிட்டனர்.

English summary
Relatives of Victims of those who died in Tuticorin Firing refuses to get back the bodies after Re post mordem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X