For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கிச் சூட்டில் சர்ச்சை... உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

துப்பாக்கிச் சூட்டில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்- வீடியோ

    சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சர்ச்சை நிலவுவதால் 12 உடல்களையும் பதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் அவர்களது உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    Tuticorin Gun shot incident: Chennai HC orders to process the bodies

    தலை, நெஞ்சை குறிவைத்து சுட்டதாகவும், தனியார் மருத்துவர்களை கொண்டு உடற்கூறு நடத்தவும் வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், ரவீந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் துப்பாக்கிச் சூட்டில் சர்ச்சை நிலவுவதால் 12 பேரின் உடல்களை பதப்படுத்த வேண்டும்.

    உடற்கூறு ஆய்வு செய்தாலும் சரி செய்யாவிட்டாலு்ம சரி உடல்களை பதப்படுத்த வேண்டும். நிலை அறிக்கையை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

    மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அரசியல் ரீதியில் வாதிட வேண்டாம் என அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 4 மாஜிஸ்திரேட் முன் பிரேத பரிசோதனை நடப்பதாக அரசு வக்கீல் வாதம் செய்தார். தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என்று தங்களுக்கு தெரிய வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.

    English summary
    Chennai HC orders to process the bodies of those who died in Tuticorin Gun shot as the incident has some controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X