For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடியில் வன்முறையை தூண்டியதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடியில் வன்முறையைத் தூண்டியதாக சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடியில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை விமான நிலையத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் துத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராகவும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

Tuticorin issue Advocate Vanjinathan arrest in Chennai airport

இந்நிலையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நீக்கம் தொடர்பான வழக்கில் டெல்லி சென்று வாதிட்டபின், விமானத்தில் சென்னை திரும்பியுள்ளார். அப்போது போலீஸார், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடியில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி சென்னை விமான நிலையத்தில் வைத்து புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

English summary
Advocate Vanjinathan arrested in Chennai airport, police says reason for arrest that Vanjinathan instigate violence in Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X