For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இழுத்து மூடுங்கள் ஸ்டெர்லைட் ஆலையை.. தூத்துக்குடியில் கமல் ஆவேசம்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு கமல், டி ராஜேந்தர் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று விசாரித்த கமல்-வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை கமல்ஹாசனும் டி ராஜேந்தரும் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

    தூத்துக்குடியில் 144 தடை விதிக்கப்பட்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு பேரணியாக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    Tuticorin: Kamal, T.R. vists those who injured on Gunshot

    இதில் 12 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி ராஜேந்தரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். முன்னதாக கமல் வரும் நேரத்தில் மருத்துவமனைக்கு வருகை தந்த ஆட்சியரை மக்கள் வழிமறித்து ஓட வைத்தனர்.

    இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில் இழந்த உயிர்களுக்கு ஒரே மாற்று ஆலையை மூடுவதுதான் என்று உறவினர்கள் கண்ணீருடன் கூறினர். உடற்கூறு ஆய்வின் போது நடுநிலையான மருத்துவர்கள் உடனிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தை வேடிக்கை பார்க்க சென்ற சாதாரண மக்களே சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றார் கமல்.

    English summary
    Tuticorin: Kamal and T.Rajendar visits those who injured in the police gun shot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X