For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி மக்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.. முதல்வர் சட்டசபையில் அறிக்கை

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த விரிவான அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வரை நீக்க வேண்டும்-டிடிவி | முதல்வர் சட்டசபையில் அறிக்கை- வீடியோ

    சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த விரிவான அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வருடத்தில் இரண்டாவது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. காலை பத்து மணிக்கு கூட்ட தொடர் தொடங்கி உள்ளது. இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.

    Tuticorin people should not run by emotions says, TN CM in assembly

    முக்கியமாக சட்டசபை கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விவாதம் நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.

    தூத்துக்குடியில் அமைதி திரும்ப பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தூத்துக்குடி மக்கள் யாரும் உணர்ச்சிவசப்பட கூடாது. மற்றவர்களின் பேச்சைக்கேட்டு மக்கள் போராட்டம் செய்ய கூடாது. அரசுக்கு நெருக்கடி கொடுக்க யாரும் நினைக்க வேண்டாம்.

    அரசை வீழ்த்த வேண்டும் என்று சில கட்சிகள் நினைக்கிறது. சில இயக்கங்கள், கட்சிகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மக்களை தவறாக வழிநடத்தி போராட்டம் செய்து வருகிறார்கள். தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    மக்களுடன் சில அமைப்புகள் சேர்ந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டன. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியது. வன்முறை கைமீறி போன காரணத்தால் அரசு துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது, என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tuticorin people should not run by emotions says, TN CM in assembly on Sterlite shooting issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X